Walking Barefoot on Grass: இன்றைய காலகட்டத்தில் செருப்பு, ஷூ அணியாமல் வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதால், வெறுங்காலுடன் நடக்கும் போக்கு ஏறக்குறைய இல்லவே இல்லை எனலாம். தினமும் காலையில் எழுந்ததும் புல்லில் வெறுங்காலுடன் குறைந்தது 20 நிமிடங்களாவது நடக்க வேண்டும். இதன் பலன்களைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
காலையில் எழுந்ததும் பச்சைப் புல்லில் வெறுங்காலுடன் நடப்பது ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க அளவில் மிகவும் நன்மை பயக்கும். அதன் நன்மைகளை அறிந்தால், நீங்களும் இந்த பழக்கத்தை இன்றிலிருந்தே கடைப்பிடிப்பீர்கள்.
பொதுவாக ஷூ அல்லது விதவிதமான காலணிகளை போட்டுக் கொண்டு நடக்கும்போது ஏற்படும் அனுபவத்திற்கும், பசுமையான புல்லின் மீது நடப்பதற்கும் உள்ள வித்தியாசம், காலுக்கு ஏற்படும் உணர்வு மாறுபாடு மட்டும் அல்ல, அது மிகப் முக்கிய ஆரோக்கியத்திற்கான மாறுபாடு ஆகும்காலையில் எழுந்ததும் பச்சைப் புல்லில் வெறுங்காலுடன் நடப்பது ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க அளவில் மிகவும் நன்மை பயக்கும். அதன் நன்மைகளை அறிந்தால், நீங்களும் இந்த பழக்கத்தை இன்றிலிருந்தே கடைப்பிடிப்பீர்கள்.
கண்களின் நரம்பு மண்டலத்துடன் இணைந்திருக்கும் நமது பாதங்களில் அழுத்தப் புள்ளி உள்ளது, பச்சைப் புல்லில் வெறுங்காலுடன் நடப்பது இந்த அழுத்தப் புள்ளியைத் தூண்டுகிறது. இது உங்கள் கண்பார்வையை மேம்படுத்தும். காலையில் எழுந்ததும் புல்லில் வெறுங்காலுடன் நடந்தால் உள்ளங்கால்களில் அழுத்தம் கொடுக்கும். சரியான புள்ளியில் அழுத்தம் இருந்தால், நம் கண்பார்வை கூர்மை நிச்சயமாக அதிகரிக்கும்.
கால்களில், ஈரமான புல்லில் வைத்து சிறிது நேரம் நடக்கும் போது, அது ஒரு சிறந்த கால் மசாஜ் வேலையை செய்கிறது. அத்தகைய சூழ்நிலையில், கால்களின் தசைகள் நிறைய தளர்வு பெறுகின்றன, இதன் காரணமாக வலி நீங்கி நிவாராணம் கிடைக்கும்.
காலையில் புல் மீது வெறுங்காலுடன் நடப்பது மன அழுத்தத்தை போக்கி நிம்மதியான உணர்வைத் தருகிறது. நமது மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது மனதை ரிலாக்ஸ் செய்து பதற்றத்தை போக்குகிறது.
தூக்கமின்மை பிரச்சனையை தீர்க்க பச்சை புல் மீது வெறுங்காலுடன் நடப்பது பயனளிக்கும். தூக்க நேரம் மற்றும் தூக்க சுழற்சியை சரிசெய்யும். செல் பாதிப்பு காரணமாக நமது உடலில் வீக்கம் ஏற்படுகிறது. வெறுங்காலுடன் நடப்பது பூமியின் எலக்ட்ரான்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாக செயல்பட்டு உங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
சிறந்த கால் இயக்கவியல் ஏற்படுவதால், இடுப்பு, முழங்கால்கள் மற்றும் வயிற்றின் மேம்பட்ட இயக்கவியலுக்கு வழிவகுக்கும். கால் மற்றும் கணுக்கால் மூட்டுகளில் பொருத்தமான இயக்கத்தை ஏற்படுத்தும். தசைகள் மற்றும் தசைநார்கள் ஆகியவற்றில் போதுமான வலிமை மற்றும் நிலைத்தன்மையை பராமரிக்கவும், வெறும் கால்களில் நடப்பது உதவும். கால் தசைகள் வலுவாவதால் முதுகின் கீழ் பகுதி உறுதியடைகிறது
அதிகாலையில் பனி படர்ந்த புல் மீது நடப்பது பாதத்தின் கீழ் உள்ள மென்மையான செல்களுடன் தொடர்புடைய நரம்புகளை தூண்டுகிறது . மூளைக்கு சமிக்ஞையை அனுப்புகிறது. இது ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.