Foods Worsening Eyes: கண்களின் வழியே உலகைப் பார்க்கும் நமக்கு, ஆரோக்கியமான உணவுகளே ஊட்டமளிக்கின்றன. அவற்றில் சில உணவுகள் கண்களுக்கு தீங்கு செய்பவை...
ஆரோக்கியத்தை பேணி காக்கும் உணவுகளே அதற்கு எதிராகவும் மாறி செயல்படுகின்றன. கண் ஆரோக்கியத்தைக் குலைக்கும் இந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
மேலும் படிக்க | 'சாப்பாடு சூப்பர்... நானே சாப்பிட்டேன்' - மெசேஜ் போட்ட டெலிவரி பாய்.
குளிர் பானங்கள்,\சோடா சார்ந்த பானங்கள், ஆற்றல் பானங்கள் மற்றும் பல வகையான இனிப்பு திரவங்களில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். சர்க்கரை சேர்க்கப்படுவது பெரும்பாலும் டைப்-2 நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு கண் பிரச்சனைகள் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது
உப்பு அல்லது சோடியத்தின் அளவு அதிகமாக இருக்கும் உணவை சாப்பிட்டால், அது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். வழக்கமான உணவில் இருந்து ஹாட் டாக், பன்றி இறைச்சி, பதிவு செய்யப்பட்ட உணவுகளை நீங்கள் விலக்க வேண்டும். உயர் இரத்த அழுத்தம் நம் கண்களைப் பாதிக்கிறது, அதே போல் இரத்த நாளங்களையும் பாதிக்கிறது, விழித்திரையின் கீழ் திரவம் உருவாவதால் இரத்த ஓட்டம் தடைபடும். இதனால் பார்வை இழப்பு ஏற்படலாம்.
அடிக்கடி ஃபாஸ்ட் அல்லது ஜங்க் ஃபுட்களை டாப்பிங்ஸ் மற்றும் டிரஸ்ஸிங் மூலம் அலங்கரிக்கிறோம். மயோனைஸ், சாலட் டிரஸ்ஸிங் மற்றும் ஜெல்லி ஆகியவற்றில் கொழுப்பின் அளவு மிக அதிகமாக உள்ளது, இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நம் கண்பார்வையை மேலும் பலவீனப்படுத்துகிறது.
எண்ணெய் உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, உடல் பருமன், அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்பதால், எண்ணெய் உணவுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அடிக்கடி பரிந்துரைக்கின்றனர். இந்த நோய்கள் அனைத்தும் நம் கண்களை பாதிக்கிறது
பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல, அதே சமயம் நம் கண்களுக்கு எதிரியாகவும் இருக்கிறது, ஏனெனில் அதில் உப்பு மற்றும் கொழுப்பின் அளவு மிக அதிகமாக உள்ளது. ஒரு ஆரோக்கியமான நபர் ஒரு நாளைக்கு 5-6 கிராம் உப்பு மட்டுமே சாப்பிட வேண்டும். வழக்கமான டயட் சாஸ்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை தவிர்ப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நல்லது (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)