ரத்த அழுத்தத்தை உடனடியாக அதிகரிக்கும் உணவுகள்: இவற்றைத் தவிர்ப்பது அவசியம்

Hypertension Foods: நீங்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், இரத்த அழுத்தத்தை உடனடியாக அதிகரிக்கக்கூடிய இந்த உணவுகளை தவிர்க்கவும்.

உயர் இரத்த அழுத்தம் என்பது, தமனிகளின் சுவர்களுக்கு எதிராக இரத்தம் பயன்படுத்தும் நீண்ட கால சக்தி மிக அதிகமாக இருப்பதால் இதயம் சரியாக செயல்படுவதில் சிக்கல்களை உருவாக்குகிறது. உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் நெஞ்சுவலி போன்ற கடுமையான நிலைமைகள் ஏற்பட காரணமாகிறது.

மேலும் படிக்க | தினமும் ஒரு கிவி பழம் செய்யும் மாயஜாலம்

1 /5

உடல் நிலை அறிகுறிகளும் ரத்த அழுத்தத்தை காட்டிக் கொடுக்கும். கடுமையான தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், மூக்கில் இரத்தம் கசிதல்,  சோர்வு, பார்வை பிரச்சனை மற்றும் நாள்பட்ட மார்பு வலி ஏற்பட்டால் இரத்த அழுத்தம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது என்று தெரிந்துக் கொள்ளலாம்

2 /5

உயர் இரத்த அழுத்தம் சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், மாரடைப்பு, பக்கவாதம், கடுமையான சிறுநீரகக் கோளாறுகள், சிறுநீரகச் செயலிழப்பு, கர்ப்பக் கோளாறுகள், கண்களுக்குப் பாதிப்புகள் போன்றவற்றுக்கு வழிவகுக்கலாம். ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை பெறுவதோடு, உணவு முறையிலும் கவனம் செலுத்த வேண்டும்.   .

3 /5

ஆரோக்கியத்தை நிர்வகிக்க உணவுப் பழக்கவழக்கங்கள் அவசியம் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஆனால், இரத்த அழுத்தத்தை உடனடியாக அதிகரிக்கச் செய்யும் எந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 'தேவை இல்லை' என்ற உணவுகளின் பட்டியல் நீண்டது.

4 /5

உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படும் ஒருவர் தவிர்க்க வேண்டிய உணவுகள் - விலங்கு இறைச்சி (குறிப்பாக பன்றி இறைச்சி, ஆட்டிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சி), பதப்படுத்தப்பட்ட உணவுகள் (அவை சோடியம், காஃபின், சர்க்கரை மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் சேர்க்கைகள் நிறைந்தவை), உங்கள் சோடியம் உட்கொள்ளலைக் குறைக்கவும். சோடியம் உட்கொள்வது உடலில் திரவத்தைத் தக்கவைத்துக்கொள்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்,   

5 /5

காஃபின், ஆல்கஹால், பால் பொருட்கள், வெண்ணெய், நெய், பனீர், சர்க்கரை பானம் ஆகியவற்றை தவிர்க்கவும்.