Food and Mental Health: குறிப்பிட்ட சில ஊட்டச்சத்துக்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. அவை மகிழ்ச்சி உணர்வை அதிகரிக்கும் செரடோனின் ஹார்மோனை தூண்டி, நமது மனநிலையை மேம்படுத்துகின்றன.
நாம் உண்ணும் உணவிற்கும் மனநிலைக்கு நேரடி தொடர்பு உள்ளதாக கூறுகின்றனர். உணவு என்பது உடலுக்காக மட்டுமல்ல மன ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியமானது.
காளான்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுகிறது. விட்டமின் டி நிறைந்த இது, செரடோனின் என்ற ஹார்மோனை தூண்டி மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது.
செர்ரி பழங்கள், மன அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு உதிக்கின்றன. இதற்கு காரணம் அதில் உள்ள லைகோபின் என்ற ஆன்டிஆக்சிடென்ட் ஆகும். இது செரடோனின் ஹார்மோனை தூண்ட உதவுகிறது.
டார்க் சாக்லேட்டில் செரடோனின் ஹார்மோனை தூண்டும் ட்ரிப்டோன் உள்ளது. இது மனதை அமைதிப்படுத்தி மகிழ்ச்சியாக்குகிறது.
வாதுமை பருப்பில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதோடு, செரடோனின் என்னும் மகிழ்ச்சி ஹார்மோனை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது
நார்ச்சத்து வைட்டமின் ஈச்சத்து போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் அடங்கிய கீரை டிரிப்டோபான் ஹார்மோனை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வாழைப்பழத்தில் உள்ள டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. உடலில் 5-HTP அளவை அதிகரிக்க டிரிப்டோபானைப் பயன்படுத்துகின்றனர். வாழைப்பழம் சிறந்த தூக்கத்தையும் கொடுக்கிறது.
அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சியுடன் டிரிப்டோபனும் இதில் அதிகம் உள்ளது, இது செரோடோனின் அதிகரிக்க உதவுகிறது. அன்னாசிப்பழத்தில் புரோமிலைன் என்ற புரதமும் உள்ளது. இதுவும் மனநிலையை மேம்படுத்துகிறது
சோயா பொருட்களிலும் டிரிப்டோபான் அதிகம் உள்ளது. சோயா பால், சோயா பனீர் (டோஃபு), சோயா தயிர் போன்ற உணவுகளை டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ளவது மன அழுத்தத்தை போக்கி மனதை அமைதிபடுத்தும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.