Hair Care Tips: இன்றைய காலகட்டத்தில் முடி உதிர்வு பிரச்சனை அதிகரித்து வருகிறது. மோசமான வாழ்க்கை முறை, கூந்தலில் ரசாயனம் பயன்படுத்துதல், உணவு மற்றும் பானங்களில் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் சிறு வயதிலேயே முடி உதிர்வு தொடங்கிவிடுகிறது. எனவே சில வீட்டு வைத்தியம் மூலம் முடி உதிர்வதை நீங்கள் தடுக்கலாம்.
புரதம், கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த பொருட்களை உங்கள் உணவில் உட்கொள்ள வேண்டும். முடி வலுவாக இருக்க, உடலில் இந்த சத்துக்கள் இருப்பது அவசியம். அவற்றின் குறைபாடு காரணமாக, முடி உதிர்தல் தொடங்குகிறது.
முடியை வலுப்படுத்த, புரதம் கொண்ட ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும். புரோட்டீன் முடியை பலப்படுத்துகிறது. முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து இயற்கையான ஹேர் மாஸ்க் செய்து 20 நிமிடம் தலைமுடியில் தடவவும். இது கூந்தலுக்கு வலுவூட்டுவதோடு, பளபளப்பாகவும் இருக்கும்.
பொடுகு முடி உதிர்வை உண்டாக்கும். முடி உதிர்வதை நிறுத்த வேண்டும் என்றால் பொடுகு தொல்லையை நீக்குவது அவசியம். கற்றாழை, எலுமிச்சை, தயிர் போன்ற இயற்கையான பொருட்களை தலைமுடியில் தடவினால் பொடுகு தொல்லை நீங்கும்.
தேங்காய் எண்ணெய் முடிக்கு நன்மை பயக்கும். இந்த எண்ணெயை கறிவேப்பிலையுடன் சேர்த்து தடவினால் முடி வலுவடையும். கூந்தலை வலுப்படுத்த தேங்காய் எண்ணெயை சூடாக்கி அதில் கறிவேப்பிலையை கலந்து முடியை மசாஜ் செய்யவும்.
ஈரமான முடியை சீவுவதால் அதிக முடி உதிர்கிறது. ஏனெனில் ஈரமான முடியின் வேர்கள் வலுவிழந்து விரைவாக உடைந்துவிடும். நீங்கள் முடி உதிர்வதை நிறுத்த விரும்பினால், ஈரமான முடியை சீவ வேண்டும்.
Next Gallery