2021 ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் பல புதிய அம்சங்களுடன் அட்டகாசமான தோரணையில் அறிமுகமானது. இதன் விலை எவ்வளவு இருக்கும்?
ராயல் என்ஃபீல்ட் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Himalayan பைக்கை பிப்ரவரி 11ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தியது. 2021 ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் பைக் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது முந்தைய மாடலை விட 10,000 ரூபாய் விலை அதிகம் என்றாலும் இந்த பைக்குடன் போட்டி போட வேறு எந்த பைக்கும் இல்லை என்று அடித்துச் சொல்கின்றனர். முந்தைய பிஎஸ் 6 மாடலைப் போலவே இந்த புதிய மாடல் பைக்கும் இருக்கும். ஆனால் இந்த புதிய மாடல் பைக், பைன் கிரீன், கிரானைட் பிளாக், மிராஜ் சில்வர் (Pine Green, Granite Black, Mirage Silver) என மூன்று புதிய வண்ணங்களில் கிடைக்கிறது. ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் மாடலிலும் 411 சிசி ஒற்றை சிலிண்டர் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. 24.31 பிபிஎஸ் சக்தியையும் 32 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் பொருத்தப்பட்டுள்ளது.
Also Read | அறிமுகமானது Electric SUV New ZS EV 2021, எவ்வளவு கிலோமீட்டர் கொடுக்கும் தெரியுமா?
முந்தைய பிஎஸ் 6 மாடலைப் போலவே இந்த புதிய மாடல் பைக்கும் இருக்கும். ஆனால் இந்த புதிய மாடல் பைக், பைன் கிரீன், கிரானைட் பிளாக், மிராஜ் சில்வர் (Pine Green, Granite Black, Mirage Silver) என மூன்று புதிய வண்ணங்களில் கிடைக்கிறது. (Photo: Royal Enfield/Twitter)
இந்த பைக் முன்புறத்தில் 31 மிமீ Telescopic forks பொருத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் மோனோ-ஷாக் இணைக்கபப்டுள்ளது. (Photo: Royal Enfield/Twitter)
பைக்கின் முன்பக்கத்தில் ஹாலோஜன் (Halogen) லைட், பின்புறத்தில் எல்.ஈ.டி லைட் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இருக்கையில் குஷன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இருக்கை உயர் அடர்த்தி கொண்ட நுரை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பைக்கிற்கு ரேடியல் டயர்கள் அனைத்தும் ஸ்போக்களுடன் கிடைக்கின்றன. முன் டயர் 90 / 90-21 மற்றும் பின்புறம் 120 / 90-17 அளவு கொண்டது. (Photo: Royal Enfield/Twitter)
பைக்கில் புதுப்பிக்கப்பட்ட டேங்க் பிரேஸ்களும் கிடைக்கின்றன, இது உயரமான பைக்குகளில் சவாரி செய்வதை எளிதாக்குகிறது.
ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் இந்திய வீதிகளில் இறங்கும்போது, சாகச மோட்டார் சைக்கிளைப் போலவே இருக்கும்.
இந்த பைக் முன்பை விட விலை உயர்ந்தது, ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு சிறந்த தொகுப்பை உருவாக்குகிறது. 2021 ராயல் ஹிமாலயன் பைக்கின் விலை 2,01,314 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்). ராயல் என்ஃபீல்ட் ஷோரூம்களில் இந்த புதிய பைக் விற்பனைக்கு வந்துவிட்டது.