காதல்… காதல்… காதல்… இந்த வார்த்தையை காதால் கேட்காதவர்கள் இவ்வுலகத்தில் இருக்க மாட்டார்கள். காற்றிலும் விரவியிருக்கும் காதலை கொண்டாட ஒரு தினம் போதுமா? 2021 ஆண்டின் காதலர் தினம் வந்துவிட்டது…
சாதாரணமானவர்களுக்கே காதல் மீது அதீத மோகம் இருக்கும்போது, காதல் திரைப்படங்களில் நடித்து, காதலர்களாக, வெற்றிகரமான ஜோடியாக உலா வரும் காதலர்களுக்கு சொல்லவா வேண்டும். இந்த காதலர் தினத்தன்று பிரபல திரைக் காதலர்களின் புகைப்படங்கள், அன்றும், இன்றும், என்றென்றும்… எப்போதும் ஒன்றாக இருக்கும் ஒரு சில ஜோடிகளைப் பார்ப்போம். தசாப்தங்களை தாண்டியும் காதல் ஜோடியாக உலா வரும் பொருத்தமான தம்பதிகள்…
Also Read | சர்வதேச திரைப்பட விழாவில் காதலனுடன் கலக்கும் நயன்தாரா
2006 ஆம் ஆண்டில் உம்ராவ் ஜான் படப்பிடிப்பின் போது ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் காதல் மலர்ந்தது. இந்த ஜோடி 2007 இல் திருமணமானது.
ஷாருக்கானும் கெளரி கானும் டீன் ஏஜிலேயே காதலிக்கத் தொடங்கிவிட்டனர். 18 வயது ஷாரூக்கானும், 16 வயது கெளரியும் காதலிக்கத் தொடங்கி பல ஆண்டுகள் கழித்து 1991 இல் திருமணம் செய்துக் கொண்டனர்
1972 இல் வெளியான Ek Nazar படப்பிடிப்பின் போது அமிதாப் பச்சனும் ஜெயா பச்சனும் நெருங்கினார்கள். உலக புகழ்பெற்ற இந்த ஜோடி 1973 ஜூன் 3 அன்று திருமண பந்தத்தில் நுழைந்தனர்.
Tujhe Meri Kasam திரைப்படத்தில் நடித்தபோது ரித்தீஷ் தேஷ்முக் மற்றும் ஜெனெலியா நெருங்கினார்கள். 2003 ஆம் ஆண்டு முதல் 2012 வரை ஒன்பது ஆண்டுகளாக காதலித்த பிரகு திருமணம் செய்துக் கொண்டனர்.
லண்டனில் பிக் பிரதர் (2007) வென்ற பிறகு, ஷில்பா ஷெட்டி சர்வதேச பிரபலமாகிவிட்டார். லண்டனில் ராஜ் குந்த்ராவை சந்தித்தபிறகு, மன்மதனின் அம்பு இருவரையும் ஒன்றாக இணைத்தது. 2009இல், ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா திருமணம் செய்து கொண்டனர்.
அக்ஷய் குமார் மற்றும் ட்விங்கிள் கன்னா ஆகியோர் Internatioal Khiladi திரைப்பட படப்பிடிப்பின்போது (1999) மனம் நெருங்கினர்.இரண்டாண்டுகளுக்குப் பிறகு 2001ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட வெற்றிகரமான தம்பதிகள்.
2007 ஆம் ஆண்டில் Tashan திரைப்பட படப்பிடிப்பின் போது சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூர் கான் ஆகியோர் நெருங்கினார்கள். ஐந்து வருடங்கள் காத்திருப்புக்கு பிறகு 2012 இல் திருமணம் செய்துக் கொண்டனர்.
தர்மேந்திரா மற்றும் ஹேமாமாலினி 1975 ஆம் ஆண்டில் காதலிக்கத் தொடங்கி 1980இல் திருமணம் செய்து கொண்டனர். தர்மேந்திராவின் முதல் மனைவி பிரகாஷ் கவுர் அவரை விவாகரத்து செய்யத் தயாராக இல்லை. ஆனால் காதல் பந்தம், திருமணமாக மாற வேண்டும் என்ற அளவு நெருங்கிய இந்த ஜோடி, இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டனர். தர்மேந்திரா மற்றும் ஹேமா மாலினிக்கு திருமணமாகி 41 ஆண்டுகள் ஆகின்றன.
அனில் கபூரும் சுனிதா கபூரும் 11 ஆண்டுகளாக காதலர்களாக இருந்த பிறகு, 1984இல் திருமணம் செய்துக் கொண்டனர்.
ஜாக்கி ஷிராஃப் - ஆயிஷா ஷிராஃப்
தலைமுறைகளைத் தாண்டிய காதல் ஜோடி... திலீப் குமார் மற்றும் சைரா பானு