FIFA 2022: ஃபீபா உலககோப்பை போட்டிகளின் முதல் மகளிர் ரெஃப்ரிகள்

FIFA 2022: ஃபீபா உலககோப்பை போட்டிகளில் கத்தார் போட்டிகளில் தான் முதன் முதலாக பெண்கள் நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்...

ஃபீபா உலகக்கோப்பை தொடர், கத்தாரில் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டித்தொடரில் முதன்முதலாக பெண் நடுவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | FIFA world cup 2022 : ஆபாச படம், செக்ஸ் டாய்ஸ், பீர்... 

1 /5

36 வயதான யமஷிதா யோஷிமி இந்த கால்பந்து போட்டிகளில் நடுவராக பணிபுரிகிறார். ஜப்பானைச் சேர்ந்தவர் யமஷிதா யோஷிமி. 2019 ஆம் ஆண்டில் AFC சாம்பியன்ஸ் லீக்கில் ஒரு போட்டியை நடத்திய முதல் பெண்மணி யமஷிதா யோஷிமி என்பது குறிப்பிடத்தக்கது

2 /5

இந்த பெண் நடுவர்களில் மிகவும் பிரபலமான பெயர் பிரான்சின் ஸ்டெபானி ஃப்ராபார்ட். 2020 ஆம் ஆண்டில் ஆண்கள் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் நடுவராகப் பொறுப்பேற்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றதன் மூலம் ஸ்டெபானி ஃப்ராபார்டே வரலாற்றுப் புத்தகங்களில் தனது பெயரைப் பதித்தார். IFFHS விளையாட்டுத் துறையில் அவரது பங்கிற்காக உலகின் சிறந்த பெண் நடுவர் விருதையும் பெற்றுள்ளார். 

3 /5

இந்த 3 பெண் நடுவர்களில் ருவாண்டாவின் சலிமா முகன்சங்காவும் இடம்பெற்றுள்ளார். சலிமா முகன்சங்கா 2012 ஆம் ஆண்டு முதல் FIFA வில் பணியாற்றி வருகிறார். 2019 மகளிர் உலகக் கோப்பை, 2020 டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் இப்போது இந்த பெரிய போட்டியில் நடுவராக சலிமா முகன்சங்கா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

4 /5

FIFA உலகக் கோப்பை 2022க்கு மொத்தம் 36 நடுவர்கள், 69 உதவி நடுவர்கள் மற்றும் 24 VAR அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் மூன்று பெண்கள் மட்டுமே நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

5 /5

FIFA உலகக் கோப்பை 2022க்கான உதவி நடுவர்களாக பிரேசிலின் நியூஜா பேக், மெக்சிகோவின் கரேன் டயஸ் மெடினா மற்றும் அமெரிக்காவின் கேத்ரின் நெஸ்பிட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.