இந்த ராசிகளின் தலைவிதி மாறும்: சுக்கிரன் அருளால் வாழ்க்கை ஜொலிக்கும்

VenusTransit: மனிதர்களின் வாழ்க்கையில் கிரக மாற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. கிரகங்களின் பெயர்ச்சியால் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கங்கள் ஏற்படுகின்றன.

VenusTransit: சமீபத்தில் மகிழ்ச்சி, திருமணம், அறிவாற்றல், வாழ்க்கை துணை, காதல் ஆகியவற்றின் காரணி கிரகமான சுக்கிரன் மகர ராசியில் பெயர்ச்சியானார்.  சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /10

அறிவாற்றல், திருமண வாழ்க்கை, செல்வம் ஆகியவற்றின் காரணி கிரகமான சுக்கிரன் 12ஆம் தேதி மகர ராசியில் பெயர்ச்சி ஆனார். சுக்கிரன் பெயர்ச்சி மக்களின் வாழ்க்கையில் பல அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

2 /10

பொதுவாகவே அனைத்து கிரகங்களின் பெயர்ச்சிகளும் அனைத்து ராசிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் பெயர்ச்சியும் அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்களைக் கொண்டு வரும்.

3 /10

வாழ்வின் முக்கிய அம்சங்களின் காரணி கிரகமான சுக்கிரனின் பெயர்ச்சி  அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு இதனால் பெரிய அளவில் நல்ல பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

4 /10

சுக்கிரன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். பணி இடத்தில் பதிவு உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும்.

5 /10

சுக்கிரன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும். உங்கள் ஆசை நிறைவேறும். பதவி உயர்வு கிடைக்கும். பெரிய ஒப்பந்தங்களை தற்போது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அதிருஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும்

6 /10

கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி தலைவிதியை மாற்றும் வகையில் இருக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்போது நடந்து முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி வரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். 

7 /10

சுக்கிரன் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகமாகும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும். வியாபாரத்தை தற்போது விரிவுபடுத்த வாய்ப்பு கிடைக்கும். தற்போது முதலீடு செய்வதற்கு ஏற்ற நேரம். இப்போது செய்யப்படும் முதலீடுகள் அனைத்திலும் லாபம் கிடைக்கும்.

8 /10

சுக்கிரன் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு பலவித வெற்றிகளை கொண்டுவரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதையும் அதிகமாகும். வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உள்ளது.

9 /10

சுக்கிரன் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு பல வித அதிர்ஷ்டங்களை அள்ளிக் கொடுக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா சென்று வருவீர்கள். அலுவலக ரீதியாக பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்க்ம். 

10 /10

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை