டென்னிஸ் சாம்பியன்களின் ஃபேஷன் ஸ்டைல் எப்போதுமே கவனத்தை ஈர்த்து அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஃபேஷன் ட்ரெண்ட், 90களிலேயே தொடங்கிவிட்டது.
பழம்பெரும் வீராங்கனையான ஸ்டெஃபி கிராஃப் முதல் 19 வயதான பிரிட்டிஷ் சென்சேஷன் எம்மா ரடுகானு வரை ஃபேஷனிலும் முடிசூடா ராணிகளாக விளங்கும் டென்ன்னிஸ் வீராங்கனைகள் இவர்கள்....
(All Photographs Credit:Twitter)
ஸ்டெஃபி கிராஃப் 1980களின் பிற்பகுதியிலும், 90களின் முற்பகுதியிலும் ஸ்டெஃபி கிராஃப் பெண்கள் டென்னிஸில் ஆதிக்கம் செலுத்தினார். ஃபேஷன் அடிப்படையில், டென்னிஸ் கோர்ட்டில் அறிமுகப்படுத்தியவர் என்றே சொல்லலாம்.
செலினா வில்லியம்ஸ் பழம்பெரும் டென்னிஸ் வீராங்கனையான செலினா வில்லியம்ஸ் ஒரு ஸ்டைல் ஐகான். வில்லியம்ஸ் தனது ஆன்-கோர்ட் ஃபேஷன் தோற்றத்திற்காக எப்போதும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடிப்பவர். ஆஸ்திரேலிய ஓபன் 2015இல் நியான்-கிரீன் கட்-அவுட் பின் ஆடை அல்லது நீல நிற டெனிம் நைக் மினிஸ்கர்ட் அணிந்து, துணிச்சலான பேஷன் காட்டியவர். பல ஆண்டுகளாக, தனது ஸ்டைலான ஃபேஷன் ரசனையை டென்னிஸ் கோர்ட்டில் காட்டுவதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கியதில்லை
சானியா மிர்சா எண்ணற்ற வெற்றிகளுக்கு பெயர் பெற்ற டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவும் ஒரு முழுமையான பேஷன் ஐகான்! சானியா தனது மூக்குத்தி, நகைச்சுவையான டி-ஷர்ட்கள் அணிந்து தாக்கத்தை ஏற்படுத்தியவர். அதிலும் இந்திய இந்திய வீராங்கனை, இந்தியாவில் ஏற்படுத்திய முக்கியமான ஃபேஷன் தாக்கம் குறிப்பிடத்தக்கது.
நவோமி ஒசாகா பல ஆண்டுகளாக, நவோமி டென்னிஸ் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு உத்வேகமாக இருந்து வருகிறார். 2020 யுஎஸ் ஓபனில் போலீஸ் மிருகத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களைக் கொண்ட முகமூடிகளை அணிந்து தனது சொந்த பாணியைக் காட்டி, அரசியல் ரீதியிலான விமர்சனங்களையும் எதிர்கொண்டவர்.
மரியா ஷரபோவா டென்னிஸின் பேஷன் ராணி என்று அழைக்கப்படும் மரியா ஷரபோவா, தனது அபாரமான ஆன்-கோர்ட் ஃபேஷன் ஸ்டைலின் மூலம் உலகின் கவனத்தை எப்போதும் ஈர்ப்பவர், அவரது டென்னிஸ் ஆடைகள் அவரது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது, அவருடைய மினிஸ்கர்ட்கள் மற்றும் டேங்க் டாப்கள் டென்னிஸ் வீராங்கனைகளின் ஆடைகள் மத்தியில் ஒரு புதிய பாணியை உருவாக்கியது.
எம்மா ராடுகானு டென்னிஸ் வாழ்க்கையைத் தவிர, எம்மா ரடுகானு நகைகள் மீதான தனது காதலுக்காக அறியப்படுகிறார். 19 வயதான பிரிட்டிஷ் டென்னிஸ் புயல், 2021 இல் டிஃப்பனி & கோ. இன் முகமாக மாறியது. இப்போது, ராடுகானு தனது ஆஸ்திரேலிய ஓபனில் அறிமுகமானபோது, 40,000 பவுண்டுகளுக்கும் அதிகமான டிஃப்பனி நகைகளை அணிந்ததற்காக தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார்.