தோனி கேப்டன்சியில் விளையாடியது மிகப்பெரிய அதிர்ஷ்டம் - பாப் டூப்ளசிஸ்

ஐபிஎல்-ல் தோனி தலைமையின் கீழ் விளையாடியது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என கூறியுள்ளார் பாப் டூப்ளசிஸ் 

 

1 /6

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்சின் முன்னாள் வீரருமான பாப் டூப்ளசிஸ், ஐபிஎல்-ல் தோனி தலைமையின் கீழ் விளையாடியது தனது வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ஷ்டமாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.  

2 /6

ஜோகார்ட்டாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க 20 ஓவர் கிரிக்கெட் லீக்கின் துவக்க விழாவில் கலந்து கொண்ட டூப்ளசிஸ் இதனை தெரிவித்தார்.  

3 /6

அவர் பேசும்போது, "சென்னை அணியில் இளம் வீரராக இருந்தது மகத்தானதாக அமைந்தது. அங்கே தோனி மற்றும் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.   

4 /6

அவர்களை போன்ற பெரிய வீரர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். தோனி ஒரு மகத்தான கேப்டன். அவர் அழுத்தமான நேரங்களிலும் அமைதியாக இருப்பார்.   

5 /6

பொதுவாகவே நீங்கள் அழுத்தமான நேரங்களில் ரிலாக்ஸாக இருந்து பந்துவீச்சு கூட்டணியில் மாற்றங்களை செய்து பயன்படுத்துவது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.   

6 /6

எனவே தோனி தலைமையில் விளையாடுவதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்" என்று டூப்ளசிஸ் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.