Ezharai shani Effects: பொதுவாக ஒரு ஜாதகத்தில் ஏழரை நாட்டு சனியோ அல்லது அஷ்டம சனியோ நடக்கும் பொழுது, சுப பலன்கள் குறைந்து, அசுப பலன்கள் அதிகரித்தும் இருக்கும். ஒரு சில காலகட்டங்களில் நிலைமை மோசமாகும்போது அதிலிருந்து காப்பாற்றுவது சரணாகதி தத்துவம் தான்.
பொதுவாக ஏழரை நாட்டு சனி மற்றும் அஷ்டமச் சனி நடக்கும் போது ஆறு மற்றும் எட்டுக்குடைய திசாபுத்திகள் நடந்தால் பலன்கள் கடுமையாக இருக்கலாம்
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்
மீன லக்கினத்திற்கு சந்திரன் திசை நடக்கும் காலகட்டங்களில், ராகு புத்தி மற்றும்,ஏழரை நாட்டு சனி அல்லது அஷ்டம சனி நடந்தால் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
கேது தசையில் சூரிய மற்றும் சந்திர புத்தி நடக்கும்போது ஏழரைச் சனி அல்லது அஷ்டமச் சனி நடந்தால் அந்த காலகட்டங்களில் திடீரென சிக்கல்கள் ஏற்படலாம்
ராகு திசையில், சூரியன் அல்லது சந்திர புத்திகள் நடக்கும் பொழுது ஏழரைச் சனி அஷ்ட்மச் சனி நடப்பில் இருந்தால் ருத்ராபிஷேகம் செய்வது நல்லது.
அந்தந்த கிரகத்திற்குரிய அதிதேவதைகளை தவறாமல் வழிபட்டு வருவது கெடுதல்களை குறைத்து நிம்மதியைக் கொடுக்கும்.
தேய்பிறை அஷ்டமியிலும், சனிக்கிழமை சனி ஹோரையில் காலபைரவரை நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது பிரச்சினைகளை சமாளிக்க உதவியாக இருக்கும்