நடிகர் சூர்யா நடிப்பில் நேற்று இரவு வெளியான படம் ‘ஜெய்பீம்’. சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ள இத்திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது
ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சூர்யா (Actor Suriya) இப்படத்தில் காவல்துறையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு நீதிபெற்று கொடுத்த உண்மை கதையில் நடித்துள்ளார்
‘ஜெய்பீம்’ படம் வெளியாகி உள்ளதை அடுத்து இந்த படத்தை பார்த்த பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்
முன்னதாக ஜெய் பீம் படத்தை பார்த்து நெகிழ்ந்து போன முதல்வர், படம் குறித்த அறிக்கையை வெளியிட்டு முதல்வரே பாராட்டிய படம் என்ற சிறப்பினை சேர்த்துள்ளார்.
ஜெய்பீம் பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் தா செ ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் என்று கமல் தெரிவித்துள்ளார்.