ஜூலையில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் OnePlus Nord 3... சிறப்பம்சங்கள் என்னென்ன?

இளைஞர்களின் விருப்பத்திற்குரிய நிறுவனமாக அறியப்படும் OnePlus, வரும் ஜூலை  5ஆம் தேதி பல சாதனங்களை வெளியிடுகிறது. அதில், பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்ட மொபைலும் ஒன்று. அதுகுறித்து இப்புகைப்படத்தொகுப்பில் காணலாம். 

 

 

 

 

 

 

1 /7

OnePlus தனது புதிய ஸ்மார்ட்போனை ஜூலை மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது, OnePlus Nord 3 மொபைல் அறிமுகமாகிறது. 

2 /7

இந்த போன் வரும் ஜூலை 5 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும்.  வரவிருக்கும் OnePlus Nord 3 மொபைலின் முக்கிய அம்சங்களை OnePlus நிறுவனம் தற்போது ஒவ்வொன்றாக அதன் இணையதளத்தில் அறிமுகப்படுத்தி வருகிறது. 

3 /7

இந்த தகவலை Amazon மற்றும் OnePlus இணையதளங்களில் நேரலையில் பார்க்கலாம். OnePlus Nord 3 குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்...

4 /7

OnePlus Nord 3 ஆனது 6.74-இன்ச் பிளாட் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 120Hz Refresh Rate உடன் வருகிறது. சிப்செட் பயன்படுத்தப்படுவதை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், இந்த மொபைல் 16 ஜிபி LPDDR5x RAM மற்றும் RAM Vita (விர்ச்சுவல் ரேம்) அம்சத்தை ஆதரிக்கும் என கூறப்படுகிறது. 

5 /7

OnePlus Nord 3 ஆனது 256 GB UFS 3.1 மெமரியைக் கொண்டிருக்கும். இந்த ஃபோனில் OIS-உதவியுடன் கூடிய 50-மெகாபிக்சல் Sony IMX890 முதன்மை கேமரா பொருத்தப்பட்டிருக்கும். OnePlus இன் பிரீமியம் ஃபோன்களைப் போலவே, Nord 3 ஆனது எச்சரிக்கை ஸ்லைடரைக் கொண்டிருக்கும்.  

6 /7

இது பயனர்களை எளிதாக அறிவிப்புகளை மாற்ற அனுமதிக்கிறது. டெம்பஸ்ட் கிரே மற்றும் மிஸ்டி கிரீன் ஆகிய இரண்டு வண்ணங்களில் Nord 3 கிடைக்கும் என்பதையும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

7 /7

Nord 3 இன் வெளியீடு நெருங்கி வருவதால், சாதனத்தைப் பற்றிய கூடுதல் விவரங்களை OnePlus வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. OnePlus நிறுவனம் Nord CE 3 மற்றும் Nord Buds 2r ஆகியவற்றையும் ஜூலை 5ஆம் தேதி வெளியிடும்.