Poco X5 Pro 5G போனை பிளிப்கார்டில் மலிவாக வாங்க அருமையான வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க!

Flipkart தளத்தில், Big Bachat Dhamal விற்பனை தற்போது நடந்து வருகிறது. இதில் Poco இன் சமீபத்திய போன் Poco X5 Pro 5G தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த சாதனத்தில் 108MP கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் HD+ டிஸ்ப்ளே போன்ற அற்புதமான அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், குறைவான EMI முதல் பம்பர் தள்ளுபடிகள் வரை உள்ள உள்ள சலுகைகளை பயன்படுத்தி நீங்கள் மிக குறைந்த விலையில் போனை வாங்கலாம்.

1 /5

Poco X5 Pro 5G மொபைல் போன் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இது 108MP முதன்மை சென்சார், 8MP அல்ட்ரா வைட் மற்றும் 2MP செகண்டரி சென்சார் கொண்டுள்ளது. 16MP கேமரா வீடியோ அழைப்பு மற்றும் செல்ஃபிக்கு கிடைக்கிறது.

2 /5

Poco X5 Pro 5G மொபைல் போனில் 6.67 இன்ச் முழு HD பிளஸ் OLED டிஸ்ப்ளே கிடைக்கிறது. இதன் திரை 2400 x 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டது. 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 900 nits உச்ச பிரகாசம் ஆகியவற்றை ஆதரிக்கிறது.

3 /5

Poco X5 Pro 5G போனில் சீரான கேமிங் மற்றும் தடையற்ற செயல்பாட்டிற்காக, Snapdragon 778G சிப்செட் மற்றும் 8GB RAM மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மூலம் இயக்கப்படுகிறது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 13-ல் வேலை செய்கிறது.

4 /5

Poco X5 Pro 5G ஸ்மார்ட்போனில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. சார்ஜ் செய்ய USB-C போர்ட் உள்ளது. இது தவிர, ப்ளூடூத், வைஃபை, ஜிபிஎஸ் மற்றும் டூயல் சிம் போன்ற அம்சங்கள் சாதனத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

5 /5

Poco X5 Pro 5G  போன் 6GB + 128GB சேமிப்பு மாறுபாடு வகைகளில் Flipkart இல் ரூ.22,999க்கு கிடைக்கிறது. அதே நேரத்தில், அதன் டாப்-மாடல் அதாவது 8ஜிபி + 256ஜிபி சேமிப்பக மாடல் ரூ.24,999க்கு வாங்கலாம். இதன் விலையில் 4000 ரூபாய் தள்ளுபடியும் அடங்கும். இது தவிர, ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும், ஆக்சிஸ் வங்கி 10 சதவீதம் தள்ளுபடியும் வழங்குகிறது. இது மட்டுமின்றி, எக்ஸ்5 ப்ரோவில் ரூ.879 இஎம்ஐ மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது.