ஒரு நபர் தினமும் ஒரு முட்டை எடுத்துக்கொள்வது உடல்நலத்திற்கு ஆரோக்கியமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
முட்டை சாப்பிட்டால் உடலில் கொழுப்புசத்து அதிகரிக்கும் என்கிற தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் அது தவறான ஒன்றாகும், முட்டையில் உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய கொழுப்புகள் மட்டுமே உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
முட்டையில் புரோட்டீன் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளது, இவற்றை உண்பது பார்வைத்திறனை மேம்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.
ரத்தசோகை உள்ள நோயாளிகளுக்கு தினமும் முட்டை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது, முட்டையில் சிறந்த புரோட்டீன்கள் இருப்பது மட்டுமல்லாது இது ரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆனால் முட்டையை ஆக்சிஜனேற்றம் செய்வது உடலுக்கு தீங்கை விளைவிக்கும். உதாரணமாக கேக் கலவைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் முட்டைகள் உடலுக்கு தீங்கினை ஏற்படுத்தும்.
மேலும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ ஒவ்வொருவரும் உடலின் கொலஸ்ட்ரால் அளவை அடிக்கடி பரிசோதித்து பார்த்துக்கொள்வது அவசியமானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.