வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை ... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்!

சமையலுக்கு சுவையும் மணமும் சேர்க்க தாளிக்கும் போது சேர்க்கப்படும் கறிவேப்பிலையை பலரும் சாப்பிடும் போது தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படும்.

கறிவேப்பிலையை உணவில் தினமும் சேர்த்து கொண்டால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கறீவேப்பிலையை பச்சையாக சாப்பிடலாம். கறிவேப்பிலை ஜூஸ், கறிவேப்பிலை பொடி போன்ற வடிவங்களிலும் எடுத்துக் கொள்ளலாம். 

1 /7

கறிவேப்பிலையை  தொடர்ந்து 120 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படும். சமையலுக்கு சுவையும் மணமும் சேர்க்க தாளிக்கும் போது சேர்க்கப்படும் கறிவேப்பிலையை பலரும் சாப்பிடும் போது தூக்கி எறிந்துவிடுவார்கள்.  

2 /7

சிறுநீரக பிரச்சனைகள் கறிவேப்பிலை ஜூஸ்  பருகி வந்தால், சிறுநீரக சம்பந்தமான பிரச்சனைகள் குணமாகும்.

3 /7

செரிமான கோளாறு நீங்க, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து பருகி வர குணமாகும்.

4 /7

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தி தவிர்க்க 10 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் கலந்து பருக வேண்டும்.

5 /7

மலச்சிக்கல் தீர  ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியுடன், தேன் கலந்து சாப்பிட வேண்டும். 

6 /7

உடல் பருமன் குறைய தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொண்டு வர நல்ல பலன் கிடைக்கும். எனினும் இதனை 3 மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது