2011 உலகக் கோப்பை டூ 2023 உலகக் கோப்பை - இந்த 7 வீரர்களுக்கு எண்டே கிடையாது!

World Cup 2023: 2011ஆம் ஆண்டில் ஐசிசி உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், அந்த தொடரில் விளையாடிய 7 வீரர்கள் மட்டுமே தற்போது இந்த 2023 உலகக்கோப்பையிலும் விளையாடுகின்றனர்.

  • Oct 03, 2023, 18:42 PM IST

 

 

 

 

1 /7

Virat Kohli: 2011ஆம் ஆண்டு எம்எஸ் தோனியின் கீழ் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் மூத்த இந்திய வீரர் விராட் கோலி ஒரு பகுதியாக இருந்தார். 2019இல் கேப்டனாக இருந்த இவர், இந்த உலகக் கோப்பையிலும் இடம்பெற்றுள்ளார்.  

2 /7

Ravichandran Ashwin: இந்தியாவால் அறிவிக்கப்பட்ட முதற்கட்ட உலகக் கோப்பை அணியில் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறவில்லை. இருப்பினும், அக்சர் படேலின் காயம் காரணமாக தற்போது அணியில் சேர்க்கப்பட்டார். இவர் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலும் விளையாடியிருந்தார். 

3 /7

Steve Smith: ஆஸ்திரேலியாவின் ரன் மெஷின் ஸ்டீவ் ஸ்மித், இந்தியாவில் 2011 உலகக் கோப்பையில் ஆறு போட்டிகளில் விளையாடினார். அப்போது அவர் கீழ் ஆர்டரில் விளையாடி வந்தார். இந்த 2023 உலகக் கோப்பையில் அவர் தான் டாப் பேட்டர் ஆவார்.   

4 /7

Kane Williamson: நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், கோலி மற்றும் ஸ்மித் போன்றே 2011ஆம் ஆண்டிலேயே உலகக் கோப்பையில் விளையாடினார். தற்போது 2023இல் நியூசிலாந்தின் கேப்டனாக உள்ளார். 

5 /7

Shakib Al Hasan: இவர் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடினார். தற்போது இவர் வங்கதேச அணியின் கேப்டனாக உள்ளார்.   

6 /7

Mushfiqur Rahim: இவரும் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடினார். இந்த உலகக் கோப்பையில் இவர் விக்கெட் கீப்பர் பேட்டராகவும், அனுபவ வீரராகவும் செயல்படுகிறார். 

7 /7

Mahmudullah: ஷாகிப் அல் ஹாசன், ரஹீம் ஆகியோரை போல் இல்லாமல், இவர் 4 போட்டிகளிலேயே விளையாடினார். தற்போது இவர் உலகக் கோப்பையில் வங்கதேச அணியில் இடம்பெற்றுள்ளார்.