இரும்புச்சத்து குறைபாடு உடலில் பல நோய்களுக்கு காரணம் ஆகிறது. சில உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
பீட்ரூட் : உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்க தினமும் ஒரு பீட்ரூட் சாப்பிடுங்கள். பீட்ரூட்டை உட்கொள்வதால் உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது
பசலைக்கீரை: உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை போக்க கீரையை சாப்பிடலாம். பசலைக்கீரையில் கால்சியம், சோடியம், தாது உப்புகள், குளோரின், பாஸ்பரஸ் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் இருப்பதால், உடலில் உள்ள இரும்பு சத்து குறைபாட்டைக் குறைக்க உதவுகிறது.
மாதுளை சுவைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் நல்லது. மாதுளம்பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாடு நீங்கும். மாதுளம் பழச்சாறு குடிப்பதால் இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், இந்தப் பழத்தை உட்கொள்வது உடலில் இரும்புச் சத்து குறைபாட்டை சரிசெய்யும் என்று கூறப்படுகிறது.
பச்சை காய்கறிகள்: உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை போக்க, பச்சை காய்கறிகளை உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ளுங்கள். பச்சைக் காய்கறிகளை சாப்பிடுவதால் இரும்புச்சத்து குறைபாடு மட்டுமின்றி பல உடல்நலப் பிரச்சனைகளையும் தவிர்க்கலாம். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE மீடியா இதற்கு பொறுபேற்காது)