21 நாளில் உடல் எடையை குறைக்க வேண்டுமா? நீங்கள் செய்யவேண்டியது இதுதான்!

இங்கு கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையை 21 நாட்கள் பின்பற்றுவதால் உடல் எடை குறைவது மட்டுமில்லாமல் முடி வளர்ச்சி, தோல் பளபளப்பு, உடல் ஆரோக்கியம் போன்றவை ஏற்படும்.

 

1 /6

உடல் எடை குறைப்பில் டயட் முறையில் பலரும் இப்போது பயன்படுத்துவது இன்டெர்மிட்டன்ட் டயட் முறை தான்.  இந்த முறையில் நீங்கள் 8 மணி நேரத்திற்கு தொடர்ந்து சாப்பிட்டு விட்டு, பின்னர் 16 மணி நேரம் எதையும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.  இந்த முறை உடல் எடையை குறைக்க உதவுகிறது.  

2 /6

தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி, யோகா, மூச்சுப்பயிற்சி, ஸ்கிப்பிங், சைக்கிள் ஓட்டுவது, சூம்பா போன்ற ஏதாவது பயிற்சியை செய்யலாம்.  

3 /6

ஜங்க் உணவுகள் எண்ணெயில் வறுத்த பொறித்த உணவுகள், செயற்கையாக அதிகம் இனிப்பு சுவையூட்டப்பட்ட உணவுகள், பீட்சா, பர்கர், கேக், சாக்லேட்டுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.     

4 /6

தினமும் நீங்கள் தூங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் உங்கள் உங்கள் மொபைல் போனை ஆஃப் செய்ய வேண்டும், சமூக ஊடகங்கள் எதையும் பயன்படுத்த கூடாது.  

5 /6

தினசரி ஒரு நபர் 7 முதல் 8 மணி நேரம் கண்டிப்பாக உறங்க வேண்டும், அதேபோல காலையில் 8 மணிக்கு முன்னதாக எழுந்துவிட வேண்டும்.  

6 /6

உடலுக்கு போதுமான நீரை தினமும் பருக வேண்டும், பழசாறுகளில் செயற்கையாக இனிப்பு சேர்த்து பருகுவது, சோடா போன்றவற்றை பருகுவதை தவிர்க்க வேண்டும்.