காலையில் டீ, காபிக்கு பதில் இந்த மூலிகை டீ குடியுங்கள்! அதிக ஆற்றல் கிடைக்கும்!

காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி குடித்தால்தான் பலருக்கும் அன்றைய பொழுது நன்றாக இருக்கும். ஆனால் இவற்றை தினசரி குடிப்பதால் உடலுக்கு கேடு ஏற்படுகிறது.

 

1 /6

காலையில் டீ, காபி குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது. எனவே, அதற்கு பதில் தினமும் மூலிகை டீ குடித்து வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.  

2 /6

ஒரு சிலருக்கு டீ, காபி குடிக்காமல் இருந்தால் தலைவலி வரும். ஆனால் இது பல வழிகளில் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. எனவே மூலிகை டீ குடிக்க அறிவுறுத்தப்படுகிறது.  

3 /6

பொதுவாக மூலிகை தேநீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. பால் மூலம் தயார் ஆகும் டீ அல்லது காபியை விட மூலிகை டீ குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். 

4 /6

ஜின்ஸெங் டீ: இந்த டீ வகை கொஞ்சம் கசப்பாக இருக்கலாம், ஆனால் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினசரி இந்த டீயை குடித்து வந்தால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் நீங்கும்.

5 /6

மட்சா டீ: இது ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஒரு வகை கிரீன் டீ ஆகும். இது நாள் முழுவதும் உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். இது உங்கள் உடலையும் மனதையும் அமைதியாக வைத்திருக்க உதவுகிறது.   

6 /6

புதினா டீ: புதினா டீ குடிப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. இது தலைவலி மற்றும் செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது.