இளைஞனின் ‘தற்கொலை’ முயற்சி; BMW காருக்கு நேர்ந்த சோதனை..!!

கடவுள் ஒருவரை காப்பாற்ற வேண்டும் என நினைத்தால்,  அவரது மரணம் என்பது எத்தனை முயற்சித்தாலும் சாத்தியம் ஆகாது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள இளைஞர் தற்கொலை செய்வதற்காக கட்டிடத்தின் 9 வது மாடியிலிருந்து குதித்தார், ஆனாலும் அவர் இறக்கவில்லை. அந்த நபர் விழுந்த BMW காரின் மேற்கூரை தான் உடைந்தது.

1 /5

கட்டிடத்தின் 9 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவரின் வயது 31. அந்த நபரின் பெயரை போலீசார் வெளியிடவில்லை. அந்த நபர் கட்டிடத்தின் கீழ் நிறுத்தப்பட்டிருந்த BMW காரின் மேல் விழுந்ததில், காரின் கூரையை உடைத்தார்.

2 /5

தற்கொலை செய்துகொண்டதில் அந்த நபர் காயமடைந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த நபர் உயிர் பிழைத்ததை நினைத்து மருத்துவர்களும் ஆச்சரியப்பட்டனர்.

3 /5

இளைஞன் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்ததில் பிஎம்டபிள்யூ காரின் கூரை முற்றிலும் சேதமடைந்தது காரின் கண்ணாடிகளும் உடைந்தன. தற்கொலை செய்யும் முயற்சியில் அந்த நபரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

4 /5

இளைஞன் குதித்த  போது இடி போன்ற சத்தம் கேட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினார். அவர் அருகில் சென்று பார்த்தபோது, ​​ஒருவர் காயமடைந்த நிலையில் காரின் மேல் படுத்திருந்ததை பார்த்ததாகவும் கூறினர்.

5 /5

அதே நேரத்தில், அங்கிருந்த ஒரு பெண்  போலீஸை அழைத்தார், பின்னர் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.