அடிக்கடி மறந்து போகிறதா? நியாபகம் வைத்துக்கொள்ள 3 வழிகள்!

நீண்ட நேரமாக ஒரு விசயத்தை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் சிரமப்படுபவர்கள் இந்த எளிய ட்ரிக்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் நினைவில் வைத்துக்கொள்ளலாம்.

நீண்ட நேரமாக ஒரு விசயத்தை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் சிரமப்படுபவர்கள் இந்த எளிய ட்ரிக்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் நினைவில் வைத்துக்கொள்ளலாம்.

 

1 /3

ஒருவரது உடல் ஆரோக்கியத்திற்கு தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பது பற்றி சொல்ல தேவையில்லை.  சிறந்த தூக்கம் ஆரோக்கியமாக செயல்பட வைப்பதோடு மட்டுமல்லாமல் சீக்கிரமே படித்துமுடிக்கவும் உதவுகிறது.  கொஞ்சம் நேரம் படிப்பது கொஞ்ச நேரம் தூங்குவது என படிக்கும் நேரத்தின் இடையில் சிறிது நேரம் தூங்குவது பயன் தருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  அப்படி செய்வதால் மூளை சோர்வடையாமல் இருந்து சுறுசுறுப்பாக செயல்பட்டு விரைவில் படிப்பதை நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது.  

2 /3

2008 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் வித்தியாசமான முடிவை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஒரே பாடத்தை மட்டும் படிப்பதை அதனுடன் சேர்த்து வேறொன்றையும் படிக்கும்பொழுது நீங்கள் படித்தவை அனைத்தும் விரைவாகவே நினைவில் நிற்பதாக கண்டறியப்பட்டுள்ளது.  வெவ்வேறு வகையான பாடங்களை படிப்பது உங்களது மூளைக்கு புதிய தகவல்களை பெற உதவுகிறது.  

3 /3

சூயிங் கம் சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும் என்றால் நம்பமுடிகிறதா? ஆம்.சுவைக்காக நாம் சாப்பிடும் சூயிங் கம்மை தினமும் மெல்லுவதால் மன அழுத்தம் குறைகிறது, நினைவாற்றல் பெருகுகிறது, மூளை அதிக விழிப்புணர்வுடன் செயல்படுவது போன்றவை கண்டறியப்பட்டுள்ளது.  சூயிங் கம் மெல்லுவதால் மூளை வேகமாக செயல்படுகிறது, இதனால் நமக்கு நினைவாற்றல் பெருகி விரைவில் படித்து நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது.