சோமன் என்ற பெயர் பெற்ற சந்திரனுக்கு உரிய நாள் திங்கட்கிழமை. சோம வாரம் என்று அழைக்கப்படும் திங்கட்கிழமையன்று சிவனை வழிபட்டால் நலன் பல பெற்று வளமுடன் வாழலாம்.
பன்னிரண்டு மாதங்களில் கார்த்திகை மாத சோம வாரம் மிகச் சிறப்பானது. இந்த தினங்களில் சிவபெருமானை வழிபட்டு விரதம் இருந்தால் பெருமான் மிகவும் மகிழ்ந்து, திருப்தியடைந்து வேண்டும் வரம் எல்லாம் தந்திடுவார் இந்த சோம வார விரதச் சிறப்பை, சிவபெருமானே பார்வதி தேவிக்குச் சொல்கிறார்.
சேமவார விரதம் இருப்பதன் நன்மைகள் என்ன?
Also Read | எம்பெருமான் சிவனை பசுக்கள் வணங்கிய தலங்கள் எவை தெரியுமா?
சேமவார விரதம் இருப்பதன் நன்மைகள் என்ன?
கார்த்திகை மாத முதல் திங்கட்கிழமை தொடங்கி கடைசி திங்கட்கிழமை அன்று இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
விரதம் என்றாலே, நாம் சாப்பிடாமல் மற்றவருக்கு உணவு அளிப்பது. இது மனக்கட்டுப்பாடு மற்றும் நாக்காட்டுப்பாட்டுக்கும் வழிவகுக்கும்.
முறையாக சிவபூஜை செய்பவர்கள், காலை நன்னீராடி, தினசரி கடமைகளை நிறைவேற்றி, வீட்டில் தீபம் ஏற்றி, சிவபெருமானைக் குறித்து விரதமிருக்க வேண்டும்.
வீடுகளில் சிவபூஜை செய்து பழக்கமில்லை எனில், அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று அங்கே அபிஷேகம் நடக்கும்போது, பஞ்சாமிர்த அபிஷேகம்,பாலாபிஷேகத்துக்கு உதவி, அர்ச்சனை செய்து, பின்னர் அடியார்களுக்கும் அன்பர்களுக்கும் அன்னப் பிரசாதத்தை வழங்க வேண்டும்.
வீட்டுக்கு வந்து, பிராமண போஜனம் செய்து தானம் வழங்கலாம். ஒருவேளை உணவு மட்டும் உண்டு விரதம் இருக்க வேண்டும்.