LIC ஊழியர்களுக்கு 16 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் போனசாக வாரத்திற்கு 2 நாட்கள் வார விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவால் நாடு முழுவதும் பணியாற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட LIC ஊழியர்களுக்கு இனிமேல் வாரத்தில் 2 தினங்கள் விடுமுறை கிடைக்கும். இதற்கான ஒப்புதலை நிதிச் சேவைத் துறை (DFS) வழங்கியுள்ளது.
Also Read | Covid-19 Updates 2021 April 18: அக்டோபஸாக 1000 கரங்களை நீட்டும் கொரோனா
பல அரசு நிறுவனங்களில் ஊழியர்களுக்கு வாரத்திற்கு 5 பணி நாட்கள் என்ற நடைமுறை அமலில் உள்ளது. அனைவருக்கும் தற்போது இந்த நன்மை கிடைத்து விட வில்லை. தற்போது, பல வங்கிகளில் வார விடுப்புகளை மாற்றும் யோசனை பரிசீலனையில் உள்ளது.
இந்த முறை சம்பள அதிகரிப்பில் நீண்ட இடைவெளி இருந்ததால், ஊழியர்கள் சுமார் 35 சதவீதம் அதிகப்படியான சம்பளத்தைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 16 சதவீத உயர்வே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை LIC ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்.
இனிமேல் LIC ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை செய்தால் போதும்
9 ஆண்டுகளுக்குப் பிறகு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நிலுவையில் இருந்த ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது