Gold Toilet! தங்கத்திலேயே வீட்டை செதுக்கியிருக்கும் போலீஸ்காரர்

தங்கத்தில் நகைகளை செய்து பார்த்திருக்கலாம், ஆபரணங்கள் போட்டு அழகு பார்க்கலாம். ஏன் தங்கப் பல் கூட வைத்திருக்கலாம். ஆனால் தங்க கழிப்பறை?  ஒரு போலீஸ் அதிகாரியின் வீட்டில் தங்கக் கழிப்பறை மட்டுமல்ல, சமையலறை, படுக்கையறையில் தங்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரஷ்யா: போலீஸ் அதிகாரியின் வீட்டில்  தங்கத்தால் செய்த கழிப்பறை, சரவிளக்கு, தங்க மூலாம் பூசிய கதவுகள், படிகள் என இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதை வீடு என்று சொல்லமுடியாது, 'ஆடம்பரமான அரண்மனை' என்று தான் சொல்லவேண்டும்.  ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்ய போலீஸ் அதிகாரி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவின் ஸ்டாவ்ரோபோல் பிராந்தியத்தைச் சேர்ந்த போலீஸ் கர்னல் அலெக்ஸி சஃபோனோவ் தனது 35 அதிகாரிகளுடன் ஒரு மாஃபியா கும்பலை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, லஞ்சம் வாங்கிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய ஆடம்பரமான வீட்டின் படங்கள் இவை...

Read Also | பொன்னகைகளின் பொன்னான புகைப்படத் தொகுப்பு

1 /6

வீட்டில் உள்ள கழிப்பறை பிரமாண்டமாக கலை நுணுக்கத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கழிப்பறை இருக்கை தங்கத்தால் ஆனது.  (Photo Source - DailyMail)

2 /6

இந்த குளியலறையில் ஆடம்பர பரோக் கண்ணாடிகள், குளியல் உபகரணங்கள், குளியலறை சரவிளக்கு உள்ளிட்ட பல பொருட்கள் உள்ளன.  (Photo Source - DailyMail)

3 /6

சொகுசு படுக்கையறையில் மின்னும் வால்பேப்பர், கனமான திரைச்சீலைகள், ஆடம்பரமான படுக்கை என அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.    (Photo Source - DailyMail)

4 /6

சமையலறையில் பளிங்கு கற்கள் மற்றும் அலமாரிகளில் தங்க வேலைப்பாடுகள் மற்றும் அழகான சரவிளக்கு பொருத்தப்பட்டுள்ளது. (Photo Source - DailyMail)

5 /6

அழகான ஆடம்பரமான பிரம்மாண்ட சரவிளக்கு உள்ளது. சுவர்களில் அற்புதமான ஓவியங்கள் வீட்டு உரிமையாளரின் கலாரசனையை வெளிக்காட்டுகிறது. (Photo Source - DailyMail)

6 /6

இந்த ஆடம்பரமான மாளிகையில் பளிங்கு டைல்ஸ், முகப்பு என பார்க்கும் இடமெல்லாம் தங்கத்தில் ஜொலிக்கிறது.  (Photo Source - DailyMail)