இரவு நன்றாக தூங்கி எழுந்தாலும் ஒரு சிலருக்கு காலையில் அதிகம் தூக்கம் வரும். இதனால் பகல் முழுக்க சோர்வாக உணர்வார்கள். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
உடல் அதிகமாக சோர்வாக இருக்கும் போது நீண்ட நேர ஓய்வு அவசியம். இதன் மூலம் இழந்த ஆற்றலை மீண்டும் பெற முடியும். அன்றாட வேலைகளை சுலபமாக பார்க்க முடியும்.
இரவு சரியான தூக்கம் இல்லை என்றால் மனச்சோர்வு, பதட்டம், இதய நோய்கள் போன்றவை ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. மேலும் பகல்நேர தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
முறையான தூக்கம் இல்லாதபோது உடல் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு மற்றும் நாள் முழுவதும் மந்தமான உணர்வு ஆகியவை ஏற்படும்.
அதிகப்படியான மன அழுத்தம் இருந்தால் இரவு சரியான தூக்கம் வராது. இதனால் நீண்ட நேரம் விழித்திருக்க நேரிடும். இது உடலுக்கு பல நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
சரியான உணவுகளை எடுத்து கொள்ளாதபோது தூக்கம் கெட்டுப்போகிறது. உடலுக்கு தேவையான இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இது சோர்வு மற்றும் பலவீனத்தை போக்குகிறது.
சில நேரங்களில் உடல் தொற்றுநோயை எதிர்த்து போராடும் போது நமக்கு தூக்கம் வராமல் இருக்கலாம். எனவே சரியான தூக்கம் வரவில்லை என்றால் மருத்துவர்களை சந்திப்பது நல்லது.