இந்த கோடையில் உங்கள் சருமத்தை பாதிக்கும் இந்த விஷயங்களை செய்யாதீர்கள்!

இந்த கோடையில் சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம். பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்வது உடலுக்கு நல்லது.

 

1 /5

கோடையில் அதிகம் வியர்வை சுரக்கும் என்பதால் மேக்கப் போடாமல் இருப்பது நல்லது. நமது முகத் துளைகளுக்கு சுவாசிக்க காற்று தேவைப்படுகிறது. கோடையில் அடிக்கடி அதிக மேக்கப் போடுவது முகப்பருக்களை வரவழைக்கும்.  

2 /5

கோடை முடியும் வரை சன்ஸ்கிரீன் போடுவது நல்லது. பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு சென்று வந்தாலும் சன்ஸ்கிரீன் போடுவது நல்லது.  

3 /5

உங்கள் முகம் அதிகம் எண்ணெய் பசை கொண்டது என்றாலும் அடிக்கடி முகத்தை கழுவ வேண்டாம். இப்படி செய்வது உங்கள் முகத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை நீக்கிவிடும்.  

4 /5

கோடை காலத்தில் நேரேற்றமாக இருப்பது முக்கியம். எவ்வளவு அதிகமாக தண்ணீர் குடிக்கிறோமோ அவ்வளவு நல்லது.  அதே போல எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.   

5 /5

இரவு தூங்கும் முன்பு முகத்தை நன்கு கழுவுவது முக்கியம். பாக்டீரியாக்கள் மற்றும் நச்சுகளை அகற்ற நல்ல பேஸ்வாசை பயன்படுத்துவது நல்லது.