Aishwarya Shankar Wedding Latest Photos : தமிழ் திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மகள், ஐஸ்வர்யாவிற்கு இன்று திருமணம் நடைப்பெற்றது. இதில், தமிழ் திரையுலகை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்
Aishwarya Shankar Wedding Latest Photos : கோலிவுட் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் என்று பெயர் பெற்றவர், ஷங்கர். இவருக்கு ஐஸ்வர்யா ஷங்கர், அதிதி ஷங்கர் என இரு மகள்கள் உள்ளனர். இதில், ஐஸ்வர்யா ஷங்கருக்கு இன்று திருமணம் நடைப்பெற்றது. இதில், தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். நயன்தாரா, விக்ரம், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என தமிழ் திரையுலகின் பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்களை இங்கு பார்ப்போம்.
இயக்குநர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா ஷங்கர், அதிதி ஷங்கர் என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கு 2021ஆம் ஆண்டு டி.என்.பி.எல் கிரிக்கெட் வீரர் ரோகித் தாமோதரனுடன் திருமணம் நடைப்பெற்றது. அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதை அடுத்து, இவர்களுக்குள் விவாகரத்து நடைப்பெற்றது. தற்போது ஐஸ்வர்யாவிற்கு, தருண் கார்த்திகேயன் என்பவருடன் திருமணம் நடைப்பெற்றுள்ளது.
ஷங்கர் மகளின் திருமண நிகழ்வில், தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் யார் தெரியுமா?
ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தின் ஹீரோ கமல்ஹாசன் திருமண நிகழ்வில் கலந்து கொண்டபோது எடுத்த படம்.
ஷங்கர் இயக்கியுள்ள அந்நியன், ஐ படங்களில் நடித்துள்ள விக்ரம், ஐஸ்வர்யா ஷங்கரின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டார்.
கோலிவுட் ரசிகர்களின் ஃபேவரட் கப்புள்ஸ், நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஐஸ்வர்யாவின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட காட்சி.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
திருமண நிகழ்வில் விக்ர, மணி ரத்னம் மற்றும் அவரது மனைவி சுஹாசினி ஒன்றாக அமர்ந்து சிரித்து பேசிக்கொண்ட காட்சி.
ரஜினிகாந்த், வேட்டி சட்டை அணிந்து கொண்டு இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
நடிகர் சூர்யா, ஷங்கரின் குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.