சனி பெயர்ச்சி பலன் 2023, இந்த 3 ராசிக்காரர்களுக்கு கஷ்ட காலம்

Shani Gochar 2023: ஜனவரி 17, 2023 அன்று சனி பகவான் கும்பத்தில் பெயர்ச்சியாகுகிறார். இதற்குப் பிறகு, மார்ச் 29, 2025 வரை இந்த ராசியில் இருப்பார். கும்பத்தில் சனி நுழைந்தவுடன் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும் அதே சமயம் சிலருக்கு கஷ்டங்கள் அதிகரிக்க ஆரம்பிக்கும்.

ஜோதிடக் கணக்கீடுகளின்படி, சனி பகவானின் ராசி மாற்றங்களும், நிலை மாற்றங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. ஜனவரி 17, 2023 அன்று சனி பகவான் கும்பத்தில் பெயர்ச்சியாகுகிறார். இதற்குப் பிறகு, மார்ச் 29, 2025 வரை இந்த ராசியில் இருப்பார். கும்பத்தில் சனி நுழைந்தவுடன் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும் அதே சமயம் சிலருக்கு கஷ்டங்கள் அதிகரிக்க ஆரம்பிக்கும். கும்ப ராசியில் சனியின் பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /3

கடக ராசி - மன மற்றும் உடல்ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில்-வியாபாரத்தில் பிரச்சனைகள் வரலாம். உடல்நிலை மோசமடையக்கூடும், இதனால் அதிக பணம் செலவாகும். சண்டை சச்சரவுகளால் பதற்றமும் ஏற்படலாம்.  

2 /3

விருச்சிக ராசி - வருமானங்கள் பாதிக்கப்படலாம். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் பெரிய முதலீடு செய்ய நினைத்தால், மிகவும் கவனமாக முடிவெடுக்கவும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். திருமண வாழ்வில் ஏற்படும் கசப்பினால் மனம் மகிழ்ச்சியடையாமல் இருக்கும்.  

3 /3

மீன ராசி - மீன ராசிக்காரர்களுக்கு துன்பங்கள் அதிகமாகும். கடினமாக உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.