இந்த பிரச்சனை இருந்தால் பால் அருந்தக்கூடாது, ஜாக்கிரதை!!

Side Effects of Milk: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பால் குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பாலுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் மட்டும் இதிலிருந்து விலகி இருக்கிறார்கள். புரதம், கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம் ஆகியவற்றுடன் பாலில் பல நுண்ணூட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. பலர் பாலை சூடாக குடிக்க விரும்புகிறார்கள், சிலரோ அதை குளிர்ச்சியாக குடிக்க விரும்புகிறார்கள். சிலர் சர்க்கரையுடன், சிலர் சர்க்கரை இல்லாமல் பாலை உட்கொள்கிறார்கள். 

1 /4

தொடர்ந்து பால் குடிப்பதால், உடல் பலவீனமும், சோர்வும் நீங்கும். இதனுடன், தூக்கமின்மை பிரச்சனைகளையும் இது நீக்குகிறது. இது தவிர பால் எண்ணற்ற நன்மைகளை கொண்டுள்ளது. ஆனால் சில சூழ்நிலைகளில் பால் உட்கொள்வது உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எந்தெந்த நபர்கள் பால் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

2 /4

மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். இந்த நிலையில் பால் குடித்தால், அது பல பிரச்சனைகளை உண்டாக்கும். இது தவிர கல்லீரலில் வீக்கம் இருந்தாலும் பாலை தவிர்க்கவும். இது நார்த்திசுக்கட்டிகள் பிரச்சனைக்கு வழிவகுக்கும். நீங்கள் அதிகமாக பால் குடித்தால், அது ஒரு தீவிர நிலைக்கு உங்களை கொண்டு செலல்லாம். 

3 /4

ஃபேட்டி லீவர் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பால் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த வகையான பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பால் செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படும். பாலில் புரதம் நிறைந்துள்ளது. இது ஃபேட்டி லீவர் பிரச்சனையை அதிகரிக்கும். இது அசிடிட்டி, அஜீரணம் போன்ற பிரச்சனைகளையும் அதிகரிக்கிறது.

4 /4

பாலில் லாக்டோஸ் உள்ளது. இதன் காரணமாக உங்கள் செரிமானம் பாதிக்கப்படலாம். அளவுக்கு அதிகமாக பால் குடித்தால் வயிற்றுப்போக்கு, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதனால்தான் கேஸ் ஏற்பட்டால் பால் குடிக்க வேண்டாம் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.