Shani Peyarchi: : மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர் சனி பகவான். ஆகையால் அவர் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனி பகவானின் ராசி மற்றும் இயக்கத்தில் ஏற்படும் சிறு மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் பல பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. சனி பகவானை போல அளிப்பவரும் இல்லை, கெடுப்பவரும் இல்லை என்றே சொல்லலாம். சனியின் மாற்றம் ஜோதிட சாஸ்திரத்தில் மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஜனவரி 17, 2023 அன்று, மகர ராசியை விட்டு, சனி பகவான் கும்ப ராசிக்குள் பிரவேசிக்கவுள்ளார். இதனால் அனைத்து ராசிகளிலும் தாக்கங்கள் இருக்கும். சனி பகவானின் ராசி மாற்றத்தால் சில கிரகங்கள் சுப பலன்களையும் சில கிரகங்கள் அசுப பலன்களையும் எதிர்கொள்ளும். குறிப்பாக, கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் சனியின் சஞ்சாரத்தால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மீன ராசிக்காரர்களுக்கு குழந்தைகள் மூலம் பாதிப்பு ஏற்படலாம். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசுங்கள். அவர்களுடன் அதிக நேரம் செலவிடுவது நல்லது. கடினமாக உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வருமானத்திற்கும் செலவுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மோசமடையக்கூடும். செலவுகளை குறைப்பது நன்மை பயக்கும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு வருமான ஆதாரம் குறைவதால் பொருளாதார நிலை மோசமாகும். பணி இடத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்காமல் போகலாம். உங்கள் பணியை யாரும் கண்டுகொள்ளாத நிலை ஏற்படக்கூடும்.
கடக ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில், வியாபாரத்தில் பிரச்சனைகள் வரலாம். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையை கடைபிடிப்பது நல்லது. கோவத்தை குறைத்து எதிராளியின் கருத்தை காது கொடுத்து கேட்க பழகுங்கள். இதனால் பல இன்னல்களை தவிர்க்கலாம்.
சனிக்கிழமையன்று, காலையில் குளித்து, சனி பகவானை முறைப்படி வணங்க வேண்டும். இந்த நாளில், நல்லெண்ணெய் கொண்டு சனி பகவானுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு பலன்களை அளிக்கும். சனி பகவானின் கோவிலுக்கு சென்று அவரை தரிசனம் செய்து அருள் பெறுங்கள். இதற்குப் பிறகு, சனி தோஷத்திலிருந்து விடுபட பிரார்த்தனை செய்யுங்கள். ஏழைகளுக்கு உங்களால் முடிந்தவற்றை தானம் செய்யுங்கள் (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மிடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)