தோனி முதல் கோலி வரை! ராமர் கோவில் திறப்பிற்கு அழைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள்!

Ayothi Ramar Temple: விராட் கோலி, எம்எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான அழைப்பாளர்களில் இடம்பெற்றுள்ளனர்.

1 /5

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது.  இந்த விழாவில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.  

2 /5

ராமர் கோயில் திற்பபு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். மேலும் இந்த திறப்பு விழாவிற்கு எம்எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகிய கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.   

3 /5

ஜனவரி 23-ம் தேதி முதல் ராமர் கோயில் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படும் என்று ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார்.  

4 /5

ராஞ்சியில் உள்ள தோனியின் இல்லத்தில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அப்போது பாஜக அமைப்புச் செயலாளர் கர்மவீர் சிங்கும் உடன் இருந்தார். அழைப்பிதழ் கிடைத்ததும் தோனி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக சிங் கூறினார்.   

5 /5

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில் விராட் கோலி ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிசிசிஐயிடம் அனுமதி கேட்டுள்ளார்.