தனுஷ் #D51 படத்தில் இத்தனை நடிகர்களா? பான் இந்தியா படமா?

தனுஷ் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர், தனக்கென உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள தனுஷ் குறித்த புதிய செய்திகள் வெளிவந்துள்ளது.

 

1 /5

சேகர் கம்முலாவின் இயக்கத்தில் தற்காலிகமாக 'டி 51' என்று அழைக்கப்படும், தனுஷின் படம் ஹைதராபாத்தில் கடந்த ஆண்டு பூஜையுடன் தொடங்கப்பட்டது.  

2 /5

D51 ஒரு மெகா மல்டிஸ்டாரர் படம் என்று கூறப்படுகிறது, இது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உருவாகிறது. சமீபத்திய தகவல்களின்படி, பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி இந்த படத்தில் தனுஷுடன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  

3 /5

மேலும் கதாநாயகிகளாக சாய் பல்லவி மற்றும் ராஷ்மிகா மந்தனாவிடம் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது அதிக முக்கிய நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு பான்-இந்திய திட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

4 /5

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இந்த பிரம்மாண்டமான படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.  

5 /5

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தனுஷின் பிறந்தநாளில் (ஜூலை 28) வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் மில்லர் டீஸர் மற்றும் டி50 தலைப்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.