Digital Replica Of Dead: நாம் நேசித்த ஒருவரின் மரணம் ஏற்படுத்தும் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இருப்பினும், பல நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவின் (AI) பல தொழில்நுட்ப திறன்களைப் பயன்படுத்தி அதைச் செய்ய முயற்சிக்கின்றன.
இறந்தவர்களுடன் பேசுவதற்கு மனிதர்களுக்கு உதவ செயற்கை தொழில்நுட்பம் பயபடுத்தப்படுகிறது. விர்ச்சுவல் குளோன்களை உருவாக்கும் நிறுவனங்கள் வீடியோவைப் பயன்படுத்தி இறந்தவர்களின் டிஜிட்டல் பிரதியை எடுக்கின்றன
தொழில்நுட்ப முன்னேற்றம், கனவில் நினைப்பதையும் சாதித்து காட்டுகிறது. ஆனால், இறந்தவர்களை உயிரிப்பிக்கும் தொழில்நுட்பம் உலகையே திகைக்க வைக்கிறது
இறந்தவரை உயிர்ப்பித்தல் நாம் இழந்தவர்ளை எதுவும் மீட்டெடுக்க முடியாது. இருப்பினும், இந்த தொழில்நுட்பம் அவற்றின் சாராம்சத்தின் ஒரு பகுதியைப் பிடிக்க முயற்சிக்கிறது, இது ஆறுதலைக் கொடுப்பதாக இருக்கலாம்
வீடியோவைப் பயன்படுத்தி இறந்தவர்களின் டிஜிட்டல் பிரதியை விர்ச்சுவல் குளோன்களை உருவாக்கும் நிறுவனங்கள் உருவாக்குகின்றன
இந்த சேவையை வழங்கும் பல ஸ்டார்ட்அப்கள் உள்ளன. DeepBrain AI என்ற நிறுவனம் "Rememory" என்ற திட்டத்தைக் கொண்டுள்ளது.
Rememory திட்டம் மூலம் இறந்தவர்கள் இருந்தால், அவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை செயற்கை நுண்ணறிவு கண்டறியும்.
இறந்த நபர் தனது வாழ்நாளில் சொல்லாத அல்லது எழுதாத வாக்கியங்கள் அல்லது கருத்துக்கள் உருவாக்கப்படாது என்று நிறுவனம் உறுதி கூறுகிறது
மீளுருவாக்கம் செய்யும் தொழில்நுட்பத்திற்கு பலரும் நன்றி கூறுகின்றனர். ஆனால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ஒருவர் உயிருடன் இருந்தபோது சொல்லாத வார்த்தைகளையும் சொல்ல முடியும் என்ற சவாலும் இருக்கிறது. ஆனால், "இவை தத்துவ சவால்கள், தொழில்நுட்ப சவால்கள் அல்ல" என்று தெரிவித்தார்