ஜனவரி 17 சனி பெயர்ச்சி 2023: இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

சனி பகவான் அடுத்த மாதம் மகர ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இதனிடையே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன் கிடைக்கும் என்பதை என்று பார்க்கலாம்.

1 /5

கடக ராசி: கண்டக சனியில் இருந்து தப்பிய கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியின் ஆதிக்கம் ஆரம்பிக்கப்போகிறது. கணவன் மனைவி இடையேயான சிக்கல் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் கவனம் தேவை.

2 /5

விருச்சிக ராசி: வண்டி வாகனங்களில் போகும் போது கவனம். வண்டி வாகனம் வாங்கும் போதும் விழிப்புணர்வு அவசியம். அர்த்தாஷ்டம சனி என்பதால் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். சனி பகவான் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது.

3 /5

மகர ராசி: மகர ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி முடிந்து பாத சனி ஆரம்பிக்கிறது. பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. சிலருக்கு வாக்கினால் பிரச்சினை உண்டாகும். பண பிரச்சினையில் சிக்க வைக்கும்.

4 /5

கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் பயணிக்கும் போது எச்சரிக்கையும் விழிப்புணர்வும் அவசியம்.

5 /5

மீன ராசி: திடீர் விரைய செலவுகள் வரும். உங்களுடைய பேச்சில் கவனமும் நிதானம் தேவை.