சீனாவில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்! புதுவகை நிமோனியா? கோவிட் அச்சங்கள்

Pneumonia in China: கொரோனா சீனாவில் தோன்றியதா என்ற நீண்ட நெடிய கேள்விகளுக்கு சரியான பதில்கள் கிடைத்ததா என்றே தெரியாத நிலையில், அந்த நாட்டில் திடீரென ஒரு வித மர்மக் காய்ச்சல் போன்ற பாதிப்பு குழந்தைகளிடம் அதிகம் பரவுவது அச்சத்தை அதிகரித்துள்ளது.  

சீனாவில் இப்போது மூச்சுத் திணறல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் கூடுதல் தகவல்களைக் கோரியுள்ளது. 

1 /7

சீனாவில் பரவிவரும்  மர்மமான நிமோனியா, மீண்டும் கோவிட் போன்ற ஆரோக்கிய சிக்கல் ஏற்படுமா என்ற அச்சங்களை அதிகரித்துள்ளது  

2 /7

அதிலும் இந்த பாதிப்பு குழந்தைகளிடம் அதிகம் பரவும் நிலையில், இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் கூடுதல் தகவல்களைக் கோரியுள்ளது.

3 /7

இந்த நிமோனியா தொடர்பாக  செய்தியாளர்களிடம் பேசிய சீனாவின் ​​தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரிகள், நாடு முழுவதும் சுவாச பாதிப்பு அதிகரித்துள்ளது உண்மைதான் என்று ஒத்துக் கொண்டனர்.   

4 /7

இன்ஃப்ளூயன்ஸா, சார்ஸ், RSV, மைக்கோப்ளாஸ்மா நிமோனியா ஆகியவை இந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமோ என்ற அச்சங்களும் எழுந்துள்ளன

5 /7

குழந்தைகளிடையே பரவும் இந்த திடீர் நிமோனியா பாதிப்பு குறித்து சர்வதேச நோய் கண்காணிப்பு அமைப்பான ப்ரோமெட் எச்சரிக்கை விடுத்துள்ளது

6 /7

பெய்ஜிங் மற்றும் லியோனிங் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகளவில் அனுமதிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது

7 /7

மூச்சுத்திணறல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், பாரம்பரிய சீன மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களையும் நாடத் தொடங்கிவிட்டனர்