யூரிக் அமிலம் என்பது பியூரின்களின் சிதைவதால் உடலில் உற்பத்தி ஆகும் ஒரு கழிவுப் பொருள். இது அளவிற்கு அதிகமாகும் போது, சிறுநீரகம் வடிகட்ட முடியாமல் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பது ஹைப்பர்யூரிசிமியா எனும் நிலைக்கு வழிவகுக்கும்.
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த, சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கடுமையான உடல் நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். முக்கியமாக மூட்டு வலிகளை ஏற்படுத்தும்.
யூரிக் அமிலம் அதிகரிப்பதால், அதிக யூரிக் அமிலம் படிகங்களாக மாறி, மூட்டுக்களின் இடைவெளியில் சேர்ந்து, கடுமையாக மூட்டு வலி ஏற்படுவதோடு, நோயெதிர்ப்பு அமைப்பு சரியாக செயல்பட முடியாமல், பல வகையான உடல் நல பிரச்சனைகள் தொடங்குகின்றன.
யூரிக் அமில பாதிப்பை பொறுத்தவரை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் சீக்கிரமாக அதை சரி செய்வதும் எளிது. அதிக யூரிக் அமிலத்தின் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், அதை உடலில் இருந்து அகற்ற சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.
தனியா என்னும் கொத்தமல்லி விதை யூரிக் அமிலத்தை சிறுநீருடன் சேர்த்து வெளியேற்றும் பல பண்புகளைக் கொண்டுள்ளது. யூரிக் அமில படிகங்களை உடலில் இருந்து வெளியேற்ற கொத்தமல்லி விதை டீ அல்லது கஷாயம் குடிக்கலாம்.
நெல்லிக்காய் என்னும் ஆம்லாவில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கிறது.உடலில் வீக்கம் அதிகரிப்பதைத் தடுப்பது மட்டுமல்லாமல், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கிறது.
வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் யூரிக் அமிலத்திலிருந்து விடுபட உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வேம்பில் காணப்படுகின்றன. இது தவிர, உடல் சேருகம் பிற நச்சுக்களை நீக்கம் செய்வதற்கும் வேம்பு நன்றாக வேலை செய்கிறது.
அழற்சி எதிர்ப்பு பொருட்கள் நிறைந்த கிலோய், யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தவும், சிறுநீரகங்களின் சரியான செயல்பாட்டிற்கும் உதவுகிறது. மூட்டுக்களின் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதன் உதவியுடன் உடலில் இருந்து நச்சுகள் மற்றும் யூரிக் அமிலம் எளிதில் அகற்றப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.