அனைத்து கிரிக்கெட் வீரர்களும் சர்ச்சையில் சிக்குவார்கள். அந்த வகையில் டிராவிட்-ம் சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். தடுப்புச்சுவர் என்று அன்போடு அழைக்கப்படும் டிராவிட் சிக்கிய சர்ச்சைகள்.
1. சச்சின் 194 ரன்களில் இருந்தபோது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 2004ல் பாகிஸ்தானுக்கு எதிரான முல்தான் டெஸ்டில், டெண்டுல்கர் 194 ரன்கள் எடுத்து இருந்த போது டிராவிட் டிக்லர் செய்தார். டிராவிட்டின் இந்த அறிவிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை .
2. 200-4ல் பந்தை சேதப்படுத்திய சம்பவம் 2003 - 04 ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த VB தொடரின் போது ராகுல் டிராவிட் பந்தை சேதப்படுத்தியாக அந்த சமயத்தில் சர்ச்சை ஏற்பட்டது.
3. 2007, 2008-ல் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். 2007 50 ஓவர் உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினார். எம்எஸ் தோனி தலைமையிலான ஒருநாள் போட்டிகளில் இரண்டு ஆண்டுகள் நீக்கப்பட்டார். பின்பு 2009-ல் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் மீண்டும் இடம்பெற்றார்.
4. ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் ஊழல் 2013ஆம் ஆண்டு டிராவிட் RR கேப்டனாக இருந்தபோது ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் ஊழல் இந்திய கிரிக்கெட்டை கடுமையாக உலுக்கியது. மூன்று ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் ஸ்பாட் பிக்சிங் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். இது டிராவிட்டை அதிர செய்தது.