செவ்வாய் சுக்கிரன் சனி சேர்க்கை ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை தான். என் பெயர்ச்சிகளின் போது, ஒரே ராசியில் சில கிரகங்களின் சேர்க்கையும் உருவாகிறது. கிரகங்களின் சேர்க்கையும் பெயர்ச்சியை போலவே அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு, கும்ப ராசியில் மூன்று முக்கிய கிரகங்கள் சந்திக்க உள்ளன. கருமத்திற்கேற்ப பலன்களை அளிக்கும் சனி, ஆடம்பரத்தை அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன், கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் சேர உள்ளன.
சனிபகவான், நமது கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கிறார். அதனால் அவர் நீதி கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். சனிபகவான் கும்ப ராசியில் இருக்கிறார். சனிபகவான் கும்பக ராசியில் வீற்றிருக்கும் நிலையில், மார்ச் 7ஆம் தேதி சுக்கிரன் கும்ப ராசிக்கு வருகிறார்.
கும்ப ராசியில், சனிபகவானும் சுக்கிரனும் இணைந்துள்ள நிலையில், மார்ச் 15 ஆம் தேதி, செவ்வாய் கும்ப ராசிக்கு வருகிறார். இதனால் சனி சுக்கிரன் மற்றும் செவ்வாய் இணைகின்றன. இந்த அபூர்வ சேர்க்கை 75 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது.
மேஷ ராசியினருக்கு சனி உள்ளிட்ட மூன்று முக்கிய கிரகங்களின் சேர்க்கை, தொழில் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மூதாதையர் சொத்துக்கள் கைக்கு வரும் வாய்ப்பு உண்டு.
மிதுன ராசியினர், சனி சுக்கிரன் செவ்வாய் சேர்க்கையால் நிதி ஆதாயங்களை பெற்று மகிழ்ச்சியாக இருப்பார்கள். வேலையில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.
துலாம் ராசியினர் இந்த கிரக சேர்க்கையால், பண வரவை அனுபவிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். சந்தோஷம் கொடுக்கும் நல்ல செய்திகள் உறவினர்களிடமிருந்து வரும்.
கும்ப ராசியில் தான் 3 கிரகங்கள் இணையும் நிலையில், வாழ்க்கையில் தங்கள் ஏற்படும்.நம்பிக்கை மன உறுதி அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் ஏற்படும். சம்பள உயர்வு பண உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.