Award for Excellence in Investment Promotion: அபுதாபியில் நடைபெற்ற உலக முதலீட்டு மன்றத்தில், முதலீட்டு ஊக்குவிப்புக்கான சிறந்த விருதை தமிழ்நாடு வென்றுள்ளது.
ஐக்கிய நாடுகளின் (United Nations) விருதை வென்ற ’வழிகாட்டுதல் தமிழ்நாடு’ என்ற பொருள் தரும் Guidance Tamil Nadu நிறுவனம் (முன்னர் தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகம்) தமிழ்நாடு அரசாங்கத்தின் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் ஆகும் . இது வருங்கால முதலீட்டாளர்களைச் சென்றடைவதற்கும் அவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கும் உருவாக்கப்பட்டது.
அபுதாபியில் நடைபெற்ற உலக முதலீட்டு மன்றத்தில் தமிழக அரசு அமைப்புக்கு விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது
வழிகாட்டுதல் தமிழ்நாடு (முன்னர் தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகம்) என்பது தமிழ்நாடு அரசாங்கத்தின் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் ஆகும்
தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் வருகிறது. இந்தத் துறையின் அமைச்சர் டாக்டர் டிஆர்பி ராஜா ஆவார்.
முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கும், புதுமைகளை உருவாக்கி, தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை மாற்ற முயற்சிக்கும் ஒரு அரசு அமைப்பாகும்
முதலீட்டு ஊக்குவிப்புக்கான மாநில நோடல் ஏஜென்சியான கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பின் MD & CEO திரு. விஷ்ணு IAS, UNCTAD இன் டைரக்டர் ஜெனரல் திருமதி ரெபேகா கிரின்ஸ்பானிடமிருந்து விருதைப் பெற்றார்.
இந்த அங்கீகாரம், முதலீடு விஷயத்தில் மாநிலத்தின் தலைமைத்துவத்தையும், வளமான எதிர்காலத்திற்கான அதன் அர்ப்பணிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
வணிகம் செய்வதை எளிதாக்கி, முதலீட்டாளர்களை ஈர்ப்பதன் மூலம் தமிழ்நாட்டை விருப்பமான முதலீட்டு இடமாக மேம்படுத்துவதற்கு இந்த நோடல் ஏஜென்சி பணிபுரிகிறது
தொழில்துறை, சமூகப் பங்குதாரர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளை வணிக வசதிக்காக ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் தமிழக அரசின் நோடல் ஏஜென்சிக்கு கிடைத்த விருது தமிழகத்தின் முதலீடு தொடர்பான பணிக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்படுகிரது