பெண்களுக்கு தீபாவளி பரிசு! உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு 1 கேஸ் சிலிண்டர் இலவசம்

Freebie To UP Women: உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு 1 காஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இன்று புலந்த்ஷஹரில் 632 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் யோகி, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு தீபாவளி பரிசாக சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

1 /8

2 /8

இன்று உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய மாநில முதல்வர், 208 கோடி ரூபாய் மதிப்பிலான 104 திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். மேலும், 424 கோடி ரூபாய் மதிப்பிலான 152 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.  

3 /8

உஜ்வாலா திட்டம் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் "பிரதமர் நரேந்திர மோடி பரிசு வழங்கியுள்ளார் என்றும், சமையல் சிலிண்டர் விலையை 300 ரூபாய் குறைத்துள்ளார் என்று கூறிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தற்போது, மாநிலத்தில் உள்ள அனைத்து உஜ்வாலா திட்ட பயனாளிக்கும் தீபாவளி பரிசாக ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

4 /8

2014 ஆம் ஆண்டு தற்போதைய பாஜக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, சமையல் எரிவாயு இணைப்புகளைப் பெறுவதற்கு மக்கள் சிரமப்பட்டதாக கூறிய முதலமைச்சர், தற்போது உத்தரப் பிரதேசத்தில் மட்டும் சுமார் 1.75 கோடி குடும்பங்கள் உஜ்வாலா திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளதாக கூறினார்.

5 /8

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்பது பிபிஎல் (வறுமைக் கோட்டிற்கு கீழே) குடும்பங்களுக்கு எல்பிஜி இணைப்புக்கான நிதி உதவியை வழங்கும் மத்திய அரசின் முன்முயற்சி திட்டமாகும்.

6 /8

உத்தரபிரதேசத்தில் உஜ்வாலா திட்டத்தில் பயன்பெறும் சுமார் 1 கோடியே 75 லட்சம் மக்களுக்கும், இந்த ஆண்டு தீபாவளிக்கு, கேஸ் சிலிண்டர்களுக்கான பணம் அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும். 

7 /8

DBT மூலம் பணம் பரிமாற்றம்:  எரிவாயு சிலிண்டருக்கான பணம் டிபிடி மூலம் கேஸ் இணைப்பு வைத்திருப்பவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும்.

8 /8

மாநில உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறையின் இந்த திட்டத்திற்கு, மாநில அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தபிறகு, தீபாவளிக்கு முன் பணம், பயனாளியின் கணக்குக்கு மாற்றப்படும்.