30 கிமீ மைலேஜுடன் 6 லட்சம் ரூபாய்க்கும் குறைவான CNG கார்கள்

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் விண்ணைத் தொட்டு வருகிறது. இதனால் சாமானியர்களின் விருப்பம் சிஎன்ஜி கார்களை நோக்கி செல்கிறது

6 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கும் சில சிஎன்ஜி வாகனங்கள் நல்ல மைலேஜ் கொடுக்கின்றன. அவற்றின் பட்டியல்...

ALSO READ | அசத்தலான விலையில் கிடைக்கும் மின்சார ஸ்கூட்டர்கள்

1 /5

6 லட்சத்திற்கும் குறைவான மைலேஜ் தரும் மலிவான சிஎன்ஜி கார்களில் மாருதியின் வேகன்ஆர் ஒன்றாகும். இந்த கார் 1 கிலோ சிஎன்ஜியில் 32.5 கிமீ மைலேஜ் தரும்.

2 /5

மாருதியின் ஆல்டோ கார், 1 கிலோ சிஎன்ஜியில் 31.5 கிமீ மைலேஜ் தருகிறது.

3 /5

ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ கார் 6 லட்சத்துக்கும் குறைவான விலைக் கார்கள் பட்டியலில் உள்ளது. இந்த கார் கிலோவிற்கு 30 கிமீ மைலேஜ் தரும்.

4 /5

மாருதி எஸ்-பிரஸ்ஸோ கார், ஒரு கிலோ சிஎன்ஜியில் 31.2 கிமீ மைலேஜ் தரும்.

5 /5

மலிவான கார்களின் பட்டியலில் மாருதியின் ஈகோ கார் வருகிறது. இந்த கார் கிலோவிற்கு 30 கிமீ மைலேஜ் தரும்.