ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே டார்கெட் செய்யும் 27 வயது விக்கெட் கீப்பர்! யார் தெரியுமா?

ஐபிஎல் 2025 போட்டியில் எம்எஸ் தோனி விளையாடினாலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் இளம் விக்கெட் கீப்பர் பேட்டரை ஒப்பந்தம் செய்ய இலக்காக உள்ளது.

 

1 /6

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணியும், எந்த எந்த வீரர்களை தக்க வைத்துள்ளோம் என்பதை அக்டோபர் 31ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.  

2 /6

இந்நிலையில் தோனி ஐபிஎல் 2025ல் விளையாடுவாரா? CSK அவரை அன்கேப்ட் வீரராக தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகம் ஆகி உள்ளது.   

3 /6

இருப்பினும் தோனி இருந்தாலும், இல்லாவிட்டாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் விக்கெட் கீப்பர் பேட்டரை சென்னை அணி ஏலத்தில் டார்கெட் செய்ய உள்ளது.  

4 /6

தற்போது வெளியான தகவலின்படி, சிஎஸ்கே ஐபிஎல் 2025 ஏலத்தில் ரிஷப் பந்தை அணியில் எடுக்க மிகவும் ஆர்வமாக உள்ளனர். டெல்லி கேபிடல்ஸ் அவரை தக்க வைக்காது என்று கூறப்படுகிறது.  

5 /6

சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மதீஷா பத்திரனா ஆகியோர் முதல் மூன்று தக்கவைப்புகளாக இருப்பார்கள். தோனி மற்றும் சமீர் ரிஸ்வி அன்கேப்ட் வீரர்களாக இருக்க வாய்ப்புள்ளது.  

6 /6

சமீபத்திய நிகழ்வில் பேசிய MS தோனி, அடுத்த சில ஆண்டுகளுக்கு சென்னை அணிக்காக விளையாட ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கேற்ற உடற்தகுதியை பெற வேண்டும் என்பதில் நோக்கமாக இருப்பதாக தெரிவித்தார்.