ஐபிஎல் மெகா ஏலம்: 2011, 2014, 2018, 2022 - சிஎஸ்கே எந்தெந்த வீரர்களை தக்கவைத்தது தெரியுமா?

IPL Mega Auctions: ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2011, 2014, 2018, 2022 ஆகிய மெகா ஏலங்களில் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக்கொண்டு, முழு அணியையும் கட்டமைத்தது என்பதை இதில் காணலாம்.

ஐபிஎல் மெகா ஏலம் என்பது அனைத்து அணிகளும் சம பலமான வீரர்களை வைத்துக்கொண்டு, கோப்பையை வெல்ல சம வாய்ப்பை வழங்க மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அந்த வகையில், இந்தாண்டும் ஐபிஎல் மெகா ஏலம் (IPL 2024 Mega Auctions) நடைபெறுகிறது. இதன்மீது பல்வேறு எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே, கடந்த காலங்களில் நடைபெற்ற மெகா ஏலங்களின் வரலாறுகளை இங்கு காணலாம்.

1 /8

ஐபிஎல் தொடங்கியபோது 2008ஆம் ஆண்டில் மெகா ஏலம் நடைபெற்றது. அதன்பின்னர், ஐபிஎல் வரலாற்றில் 2011, 2014, 2018, 2022 ஆகிய நான்கு முறை மெகா ஏலம் நடைபெற்றது.   

2 /8

ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஐபிஎல் மெகா ஏலம் (IPL Mega Auction) நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் மினி ஏலம் நடைபெறும். எனினும், 2016, 2017இல் சென்னை, ராஜஸ்தான் அணிகள் தடை செய்யப்பட்டதால் 2018ஆம் ஆண்டில் மெகா ஏலம் நடைபெற்றது.   

3 /8

மெகா ஏலத்தை முன்னிட்டு அணிகள் வெறும் 4, 5 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மொத்தமும் கலைக்கப்படும். அதாவது, அனைத்து அணிகளும் சம வாய்ப்பு அளிக்க இந்த மெகா ஏலம் நடைபெறுகிறது.   

4 /8

இந்தாண்டு 2025 ஐபிஎல் சீசனை (IPL 2025 Mega Auction) முன்னிட்டு மெகா ஏலம் நடைபெறுகிறது. இந்த சீசனில் நீங்கள் ஒரு Uncapped வீரர் உள்பட 6 பேரை தக்கவைக்கலாம். இதனை ஏலத்திற்கு முன்னரும் தக்கவைக்கலாம், ஏலத்தில் RTM மூலம் தக்கவைக்கலாம். அந்த வகையில், கடந்த காலங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) மெகா ஏலங்களில் தக்கவைத்த வீரர்களை இங்கு காணலாம்.  

5 /8

2022 மெகா ஏலம் (IPL 2022 Mega Auction): ரூ. 16 கோடி - ரவிந்திர ஜடேஜே, ரூ. 12 கோடி - எம்எஸ் தோனி, ரூ. 8 கோடி - மொயின் அலி, ரூ. 6 கோடி - ருதுராஜ் கெய்க்வாட்  

6 /8

2018 மெகா ஏலம் (IPL 2018 Mega Auction): ரூ. 15 கோடி - எம்எஸ் தோனி, ரூ.11 கோடி - சுரேஷ் ரெய்னா, ரூ.7 கோடி - ரவிந்திர ஜடேஜா. RTM: ஃபாப் டூ பிளெசிஸ் - ரூ.1.6 கோடி, டுவைன் பிராவோ - ரூ. 6.4 கோடி.  

7 /8

2014 மெகா ஏலம் (IPL 2014 Mega Auction): ரூ.12.50 கோடி - எம்எஸ் தோனி, ரூ.9.50 கோடி - ரெய்னா, ரூ.7.50 கோடி - அஸ்வின், ரூ.5.50 கோடி - ஜடேஜா.  

8 /8

2011 மெகா ஏலம் (IPL 2011 Mega Auction): 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் - எம்எஸ் தோனி, 1.3 மில்லியன் அமெரிக்க டாலர் - சுரேஷ் ரெய்னா, 9,00,000 அமெரிக்க டாலர் - முரளி விஜய், 5,00,000 அமெரிக்க டாலர் - ஆல்பி மார்கல்