ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா (Vi) ஆகிய இந்த மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க கடும் போட்டியில் இறங்கியுள்ளன. நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களுடன், வாடிக்கையாளர்களை தங்கள் வசப்படுத்த பல சிறந்த சலுகைகளையும் வழங்குகின்றன.
இந்த நிறுவனங்கள் பல மலிவான திட்டங்களையும் வழங்கி வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்துகின்றன. மலிவான மற்றும் பல நன்மைகள் கூடிய ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த திட்டங்களைப் பற்றி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ தளங்களில் தெரிந்துகொள்ளலாம்.
வோடபோன்-ஐடியா டெலிகாம் நிறுவனம் 149 ரூபாய்க்கு 28 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு வசதியை வழங்குகிறது (Vodafone-idea 150 Rupees Cheapest Plan). இந்தத் திட்டத்தின் கீழ், பயனர்கள் 2 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுவார்கள். இது தவிர, ரூ .99 -க்கான மற்ற திட்டங்களும் உள்ளன. இவற்றில் 200 எம்பி இணையத் தரவு கிடைக்கிறது. இருப்பினும் இதில் எஸ்எம்எஸ் வசதி இல்லை. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 18 நாட்கள் ஆகும். மூன்றாவது திட்டம் ரூ 129-க்கானது. இது 24 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் கீழ், பயனர்கள் 1 ஜிபி இணைய தரவைப் பெறுகிறார்கள்.
ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பரிசுகள் வடிவில் பல நன்மைகளை வழங்குகிறது (Reliance Jio prepaid recharge plan benefits). இதில் மிக மலிவான திட்டம் ரூ 149-க்கானது ஆகும். இதில் வரம்பற்ற அழைப்புகள், தினமும் 1 ஜிபி இணைய தரவு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும். நிறுவனத்தின் இந்த திட்டம் 24 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில், JioTV, JioCinema, JioNews, JioSecurity, மற்றும் JioCloud செயலிகளின் அணுகலும் கிடைக்கும்.
ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு மலிவான ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது (airtel prepaid recharge plan benefits). இதில் நீங்கள் 150 ரூபாய்க்கும் குறைவான பல சலுகைகளுடன் ரீசார்ஜ் திட்டங்களைப் பெறுவீர்கள். ரூ 149 திட்டத்தின் கீழ், பயனர்கள் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் மொத்தமாக 2GB தரவைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இரண்டாவது திட்டம் ரூ 129 க்கு வருகிறது. இந்த திட்டம் 24 நாட்கள் செல்லுபடியாகும். இதில் பயனர்கள் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 1 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம்.