Flight ticket booking: நீங்கள் விமானத்தில் பயணிக்கும் திட்டம் கொண்டிருந்தால், இப்போது டிக்கெட் முன்பதிவில் நல்ல சலுகைகள் கிடைக்கின்றன. பல பயண நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் உள்நாட்டு அல்லது சர்வதேச விமானங்களை முன்பதிவு செய்வதில் பெரும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகின்றன. நீங்கள் விரும்பினால், 5000 ரூபாய் வரை இதில் பலன் பெறலாம். இந்த சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பயண நிறுவனமான கிளியர்ட்ரிப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நாட்டு விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தால், உடனடியாக ரூ.5000 வரை தள்ளுபடி பெறலாம். இதற்கு, முன்பதிவு செய்யும் போது ஆன்லைனில் பணம் செலுத்தும் போது CTFLY என்ற குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். இந்த செயல்பாடு 28 பிப்ரவரி 2022 வரை செல்லுபடியாகும்.
ஐசிஐசிஐ வங்கியின் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் டிராவல் போர்டல் டிராவலூக்கில் இருந்து விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், ஒவ்வொரு முன்பதிவுக்கும் 12 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். இது ரூ. 2500 வரை இருக்கலாம். முன்பதிவில் ஆன்லைனில் பணம் செலுத்தும் போது, TICICI குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். இந்த சலுகை 31 மார்ச் 2022 வரை செல்லுபடியாகும்.
டிராவல் போர்டல் மேக்மைட்ரிப்பில், ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் இஎம்ஐ மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி உள்நாட்டு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், ரூ.1700 வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம். ஆன்லைனில் பணம் செலுத்தும் போது குறியீடு - FLYMON ஐப் பயன்படுத்த வேண்டும். இந்த சலுகை 28 மார்ச் 2022 வரை செல்லுபடியாகும்.
ஈஸிமைட்ரிப் போர்ட்டலில் உள்நாட்டு அல்லது சர்வதேச விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், ரூ.5000 வரை தள்ளுபடி பெறலாம். உள்நாட்டு விமானங்களுக்கு பல சலுகைகள் உள்ளன. மாணவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் பிற பயணிகள் ரூ. 3000 வரை தள்ளுபடியைப் பெறலாம். இந்த போர்ட்டலில் உள்ள சலுகை 28 பிப்ரவரி 2022 வரை செல்லுபடியாகும். சர்வதேச விமான டிக்கெட் புக்கிங்கில் 5000 ரூபாய் வரை சலுகை உள்ளது.
உங்களிடம் HDFC வங்கி கிரெடிட் கார்டு இருந்து, Paytm இலிருந்து சர்வதேச விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், நீங்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடி அல்லது அதிகபட்சமாக ரூ 5000 வரை பலன் பெறலாம். அதற்கு இந்த விளம்பர குறியீடு INTHDFC ஐப் பயன்படுத்த வேண்டும். சலுகை 30 மார்ச் 2022 வரை செல்லுபடியாகும்.