Top 5 cars under 7 lakh in India: பட்ஜெட்டிற்குள் மேம்பட்ட அம்சங்கள் கொண்ட காரை வாங்க விரும்பினால், இந்தியாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. மாருதி, ஹோண்டா, டாடா கார்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7 லட்சத்திற்கும் குறைவான இந்த சொகுசு கார்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பலேனோ ஐடில்-ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பத்துடன் 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் எஞ்சினைப் பெற்றுள்ளது. ஹெட்-அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா பேக், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்கள், ஆர்காமிஸ்-டியூன் செய்யப்பட்ட சவுண்ட் சிஸ்டம், ரிவர்சிங் கேமரா, ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 9 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அம்சங்கள் இந்த காரில் உள்ளன. பலேனோவின் விலை ரூ.6.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
அமேஸ் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் விருப்பங்களுடன் கிடைக்கிறது. இது ஆட்டோ-எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்கள், எல்இடி ஃபாக் விளக்குகள் மற்றும் டெயில் விளக்குகள், 15-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள், 7-இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.6.43 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
டிசையரில் 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் எஞ்சின் கிடைக்கிறது. இது க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லைட்கள், ஆட்டோ-ஃபோல்டிங் ஓஆர்விஎம்கள், புஷ்-பட்டன் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் ரியர் வென்ட்கள், ஆட்டோ ஏசி, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே, 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 4.2-இன்ச் மல்டி-கலர் எம்ஐடி போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. டிசையர் காரின் விலை ரூ.6.24 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
இது 1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் விருப்பத்தைக் கொண்டுள்ளது. 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சுற்றுப்புற விளக்குகள் மற்றும் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் போன்ற அம்சங்கள் காரில் வழங்கப்பட்டுள்ளன. Tata Altroz விலை ரூ.6.20 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
GRAND i10 Nios ஆனது 1.2-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் விருப்பங்களுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே, 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பின்புற ஏசி வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி, கீலெஸ் எண்ட்ரி மற்றும் ஹைட் அட்ஜஸ்டபிள் ஓட்டுநர் இருக்கை ஆகிய அம்சங்கள் இதில் உள்ளன. இதன் விலை ரூ.5.39 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.