Mumbai அந்தேரி ரயில் நிலையத்தின் மாறும் நவீன தோற்றம்…

நாட்டின் நிதித் தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பைக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அந்தேரி ரயில் நிலையத்தின் தோற்றம் முற்றிலும் மாறப்போகிறது. 

எதிர்வரும் நாட்களில், அந்தேரி ரயில் நிலையத்தை இனிமேல் மிகவும் நவீன தோற்றத்தில் பார்க்கலாம். அந்தேரி ரயில் நிலையம் இனிமேல்எப்படி இருக்கும் என்பதற்கான படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. புதிய நிலையத்தின் அழகிய படங்களை இங்கே பார்ப்போம்.

Also Read | History Today June 28: வரலாற்றில் இந்த நாளின் முக்கியத்துவம் என்ன?   

1 /5

மறு அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் முதல் கட்ட செலவு 218 கோடி ரூபாய் ஆகும். பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதற்காக ரயில் நிலையம் புனரமைக்கப்படுகிறது இதன் நோக்கம்.

2 /5

அந்தேரி ரயில் நிலைய மறுவடிவமைப்பு 21843 சதுர மீட்டர் பரப்பளவில் நடந்து வருகிறது. இதற்கு DBFOT (Design, Build, Finance, Operate and Transfer) மாதிரி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது

3 /5

அந்தேரியின் நவீன ரயில் நிலையம் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த 100% உகந்ததாக இருக்கும். மேலும் பசுமை கட்டிடம் (Green Building) என்ற கருத்தக்கத்தில் உருவாக்கப்படும். ரயில் நிலையத்தில் நவீன சி.சி.டி.வி மற்றும் பிற தேவையான அமைப்புகள் நிறுவப்படும்.

4 /5

அந்தேரி நிலையத்தை பயன்படுத்துகிறார்கள். நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களுக்கான முக்கிய ரயில் நிலையம் அந்தேரி. நாள்தோறும் சுமார் 4.2 லட்சம் பயணிகள் அந்தேரி நிலையத்தை பயன்படுத்துகிறார்கள். மும்பையில் மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான அந்தேரியில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது

5 /5

மும்பையில் உள்ள அந்தேரி நிலையம் தவிர, தாதர், கல்யாண், தாகுர்லி, பாந்த்ரா, சி.எஸ்.எம்.டி, தானே மற்றும் போரிவாலி ரயில் நிலையங்களும் புனரமைக்கப்படும் பட்டியலில் உள்ளன.