ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்க...காலையில் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்!

Happy Hormones Breakfasts : நம்மை நாம் மகிழ்ச்சிப்படுத்திக்கொள்ள, மனதை ஆயத்தப்படுத்துவது மட்டுமன்றி, நாம் சாப்பிடும் உணவுகளின் கையிலும் இருக்கிறது. வாழ்வில் என்ன நடந்தாலும் வருந்தாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று பெரியோர் சொல்லக்கேட்டிருப்போம். 

Happy Hormones Breakfasts : நம்மை நாம் மகிழ்ச்சிப்படுத்திக்கொள்ள, மனதை ஆயத்தப்படுத்துவது மட்டுமன்றி, நாம் சாப்பிடும் உணவுகளின் கையிலும் இருக்கிறது. வாழ்வில் என்ன நடந்தாலும் வருந்தாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று பெரியோர் சொல்லக்கேட்டிருப்போம். ஆனால், கையில் கிடைப்பதை சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமற்ற முறையில் பார்த்துக்கொண்டால் நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? தினம் தோறும் நாட்களை மகிழ்ச்சியாக எதிர்கொள்ள எந்தெந்த உனவுகளை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம் என்பதை இங்கு பார்ப்போம். 

1 /8

ஹேப்பி ஹார்மோன்ஸ்: நாம் காலையில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்து, நமது மனநிலையும் மாறலாம். எனவே, மகிழ்ச்சி ஹார்மோன்களை அதிகரிக்க சில காலை உணவுகளை சாப்பிடலாம். அவை என்னென்ன தெரியுமா?

2 /8

புரதம் நிறைந்த உணவுகள்: புரதச்சத்து நிறைந்த உணவுகளை காலையில் எடுத்துக்கொள்ளலாம். இது, வயிறை முழுமையாக உணர செய்வதால், மன நிலையும் அதிகரிக்கும். 

3 /8

ஓட்ஸ்: ஓட்ஸில், ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் அதிகமாக இருக்கிறது. இது, உடல் நலன் மற்றும் மன நலனை பாதுகாக்கும். 

4 /8

பாசிப்பருப்பு சாலட்: பாசிப்பருப்பில் வைட்டமின் பி சத்துகள் நிறைந்திருக்கிறது. இது ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் மன நலனுக்கும் நன்மை பயக்கும். 

5 /8

பழ சாலட்: ஆப்பிள், ஆரஞ்சு ஆகிய பழங்கள் உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்கள் அதிகரிக்க உதவும். இதனால், இதை காலை உணவாக சாப்பிடலாம். 

6 /8

தயிர், தேன் மற்றும் நட்ஸ்: தயிரை ப்ரோபயோட்டிக் சத்துகள் இருக்கிறது. இதனை, தேன் மற்றும் நட்ஸ் ஆகியவற்றுடன் கலந்து சாப்பிடலாம். 

7 /8

சியா விதை புட்டிங்: சியா விதைகளை ஒரு இரவு தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாம். இதனுடன் பெர்ரி பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம். 

8 /8

வாழைப்பழ பாதாம் ஸ்மூதி: வாழைப்பழமும், பாதாமும் மன நலனை நல்லபடியாக பார்த்துக்கொள்ளும் பன்புகளை கொண்டிருக்கிறது. இதில் ஸ்மூதி செய்து சாப்பிடலாம்.  (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)